ஓடும் கார்ல இருந்து பறந்த பணக்கட்டுகள்.. மர்ம நபர் செஞ்ச வேலை.. தட்டி தூக்கிய போலீஸ்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானா மாநிலத்தில் இளைஞர் இருவர் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை பறக்கவிடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

ஓடும் கார்ல இருந்து பறந்த பணக்கட்டுகள்.. மர்ம நபர் செஞ்ச வேலை.. தட்டி தூக்கிய போலீஸ்.. வைரலாகும் வீடியோ..!

                                   Images are subject to © copyright to their respective owners.

Also Read | " எனக்குன்னா உடனே அவுட் கொடுத்திருப்பாரு".. கோலியின் Thug Life சம்பவம்.. அம்பையரே சிரிச்சிட்டாரு😂.. வீடியோ..!

வீடியோ

இணையத்தின் வளர்ச்சியும், சமூக வலை தளங்களின் வருகையும் மனித குலத்திற்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகின்றன. நொடி பொழுதில் நம்முடைய தகவலை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்க சோசியல் மீடியாவே ஒரே வழி என்றாகிவிட்டது. அதே வேளையில் இதில் சுவாரஸ்ய கண்டெண்டுகளுக்கு பஞ்சமே இருப்பதில்லை. பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் சிலர் வினோதமான காரியங்களை செய்து அதை வீடியோவாக வெளியிடுவதையும் நாம் பார்த்துவருகிறோம். ஆனால், அவை சட்டத்தை மீறும் வகையில் இருக்கும்பட்சத்தில் அதற்கான எதிர்வினைகளையும் அவர்கள் சந்தித்தே ஆகவேண்டியிருக்கும்.

Man Throw Money From Moving Car Cops Files case Video

Images are subject to © copyright to their respective owners.

பறந்த பணம்

அண்மையில் ஹரியானா மாநிலத்திலும் இதேபோல ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அம்மாநிலத்தின் குருகிராம் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் வெள்ளை நிற காரில் இருவர் இருக்கின்றனர். சாலையில் கார் வேகமாக முன்னேற பின்பக்கத்தில் இருந்த ஒருவர் பணத்தை எடுத்து வீசுகிறார்.

இந்த வீடியோ கொஞ்ச நேரத்தில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக ஆரம்பித்தது. இது காவல்துறையினரின் கவனத்திற்கு வரவே, இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர் போலீசார். அதன் பலனாக ஜோராவர் சிங் கல்சி மற்றும் அவரது நண்பர் குர்ப்ரீத் சிங் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

Man Throw Money From Moving Car Cops Files case Video

Images are subject to © copyright to their respective owners.

வழக்கு பதிவு

இதுகுறித்து பேசியுள்ள ACP விகாஸ் கவுசிக்,"கோல்ஃப் மைதான சாலையில் காரில் இருந்து கரன்சி நோட்டுகளை வீசிய இரண்டு பேர் பிரபல வெப் சீரிஸ் காட்சியை மீண்டும் உருவாக்க முயற்சி செய்திருக்கின்றனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ மூலம் போலீசாருக்கு இந்த சம்பவம் பற்றி தெரிய வந்தது. ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார்.

Also Read | "இனி ஜெயிக்கவா போறோம்னு சூட்கேஸ்-லாம் பேக் பண்ணிட்டோம்".. அதுக்கு அப்புறம் லக்ஷ்மன் - டிராவிட் நிகழ்த்திய மேஜிக்..மனம் திறந்த ஹேமங் பதானி..!

MAN, THROW, MONEY, MOVING CAR

மற்ற செய்திகள்