ஊழியரைக் கடத்தி 'அடைத்து' வைத்து... அந்தரங்க இடத்தில் 'சானிடைசர்' தெளித்து... 'சித்திரவதை' செய்த ஓனர்... ஷாக்கான போலீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கம்பெனி ஊழியரை கடத்தி அடைத்து வைத்து அவரது ஆணுறுப்பில் சானிடைசர் தெளித்த அவலம் நடந்துள்ளது.

ஊழியரைக் கடத்தி 'அடைத்து' வைத்து... அந்தரங்க இடத்தில் 'சானிடைசர்' தெளித்து... 'சித்திரவதை' செய்த ஓனர்... ஷாக்கான போலீஸ்!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் வேலையிழப்பு, பொருளாதார சரிவு, வறுமை போன்றவை மக்களை வாட்ட ஆரம்பித்து இருக்கின்றன. அதிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலை விரித்தே ஆடத்தொடங்கி இருக்கின்றன. தற்போது ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது.

கோத்ரூட்டில் ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்து தரும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 30 வயது இளைஞர் ஒருவர் மேனேஜராக வேலை செய்துள்ளார். வேலை தொடர்பாக டெல்லி சென்ற அவர் கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்டார். தொடர்ந்து மே 17-ம் தேதி புனே திரும்பி இருக்கிறார்.

வெளியூரில் இருந்து வந்ததால் 17 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அவரது ஓனர் சொல்லி இருக்கிறார். மேனேஜர் கையில்  காசு சுத்தமாக இல்லை. வேறு வழியின்றி கையில் இருந்த டெபிட் கார்டு, செல்போனை அடகு வைத்து தங்கியிருக்கிறார். இதனியிடையே கடந்த ஜூன் 13-ம் தேதி கம்பெனி ஓனர் இன்னும் சிலருடன் சேர்ந்து மேனேஜரை கடத்தி சென்று அடைத்து வைத்துள்ளார்.

மேலும் கம்பெனி பணத்தை செலவு செய்ததாக அவரை அடித்து, உதைத்து அவரது ஆணுறுப்பில் சானிடைசர் தெளித்து சித்திரவதை செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து தப்பித்த மேனேஜர் காவல் நிலையத்தில் புகாரளிக்க தற்போது அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து இருக்கிறார்களாம்.

மற்ற செய்திகள்