ரசகுல்லா தீர்ந்து போச்சா?.. திருமண வீட்டில் இருவீட்டார் இடையே பிரச்சனை.. அடுத்த வினாடி நடந்த அதிரவைக்கும் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசகுல்லா தீர்ந்து போச்சா?.. திருமண வீட்டில் இருவீட்டார் இடையே பிரச்சனை.. அடுத்த வினாடி நடந்த அதிரவைக்கும் சம்பவம்..!

Also Read | அரசர் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.. பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய ரிஷி சுனக்.. வைரலாகும் புகைப்படம்..!

பொதுவாக வட இந்தியாவில் திருமணம் மற்றும் வரவேற்பு ஆகிய நிகழ்வுகளில் ரசகுல்லா உள்ளிட்ட இனிப்புகளை விருந்தினர்களுக்கு பரிமாறுவது வழக்கமாகும். அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் ரசகுல்லாவால் ஏற்பட்ட தகறாரில் திருமண வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள எட்மத்பூர் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான். இவருடைய மகளுக்கு கடந்த புதன்கிழமை அன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழக்கப்படி ரசகுல்லா பரிமாறப்பட்டதாக தெரிகிறது. அப்போது, தங்களுக்கு ரசகுல்லா வைக்கப்படவில்லை என கூறி சிலர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

Man slew during a fight over sweet shortage at a wedding in UP

கொஞ்ச நேரத்தில் வாக்குவாதம் கைமீறி போயிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாப்பிள்ளை மற்றும் பெண்வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருந்த சிலர் கைகலப்பில் ஈடுப்பட்டதாகவும் தெரிகிறது. சற்று நேரத்தில் சண்டை பெரிதாகவே, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சன்னி என்பவர் கடுமையாக காயமடைந்திருக்கிறார்.

இதனையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனையடுத்து சன்னி ஆக்ராவில் உள்ள சரோஜினி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சன்னியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய எட்மத்பூர் வட்ட அதிகாரி ரவிக்குமார் குப்தா,"தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சன்னி, முதலில் சமூக நல மையத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் காயமடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.

Man slew during a fight over sweet shortage at a wedding in UP

Also Read | "கிரிக்கெட்டில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே சம்பளம்"... BCCI செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு.. ஒரு மேட்ச்-க்கு எவ்வளவு ஊதியம்? வெளியானது பட்டியல்...!

UTTARPRADESH, MAN, SWEET, FIGHT, WEDDING, WEDDING FUNCTION

மற்ற செய்திகள்