"வேலைக்குதான் போறதில்ல.. சமைக்க help பண்லாம்ல.." மனைவியின் கேள்வியால் கடுப்பான கணவன்.. கொஞ்ச நேரத்துல ஊருக்கே அதிர்ச்சி ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தராகண்ட் மாநிலத்தில் காலை உணவு தயாரிப்பதில் வந்த வாக்குவாதம் காரணமாக குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.

"வேலைக்குதான் போறதில்ல.. சமைக்க help பண்லாம்ல.." மனைவியின் கேள்வியால் கடுப்பான கணவன்.. கொஞ்ச நேரத்துல ஊருக்கே அதிர்ச்சி ..!

வாக்குவாதம்

உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் மகேஷ் திவாரி. 47 வயதான இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் இருக்கின்றனர். வேலையை இழந்த மகேஷ் கடந்த சில வருடங்களாக வேலை தேடாமல் இருந்திருக்கிறார். மிகுந்த கடவுள் பக்தியாளரான இவர் நேற்று பூஜையில் ஈடுப்பட்டிருந்த போது, சமைக்க உதவி செய்யுமாறு அவரது மனைவி அழைத்திருக்கிறார். அப்போது, வேலைக்கு செல்லாமல் இருப்பது குறித்தும் அவரது மனைவி பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

Man slew 5 members of the family over making breakfast

ஒருகட்டத்தில் வாக்குவாதம் எல்லை மீறியிருக்கிறது. அதைத் தொடர்ந்து மகேஷ் தனது மனைவியை கொலை செய்ததுடன் வீட்டில் இருந்த 3 மகள்கள் மற்றும் அவரது தாயையும் கொலை செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து வீட்டை உட்புறமாக தாழிட்டுக்கொண்டு உள்ளேயே இருந்திருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மகேஷின் வீட்டு கதவை தட்ட, அவர் கதவை திறக்காததால் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

உடைக்கப்பட்ட கதவு

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணிபோக்ரி பகுதி காவல்நிலைய அதிகாரிகள் மகேஷ் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கின்றனர். அப்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மகேஷ் கொலை செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் அதிகாரிகள். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

Man slew 5 members of the family over making breakfast

மகேஷின் சகோதரர் ஸ்பெயினில் இருப்பதாகவும், அவருடைய வீட்டில் தற்போது வசித்துவரும் மகேஷ், பொருளாதார ரீதியாக தனது சகோதரரையே நம்பி இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வேலைதேடும்படி தொடர்ந்து மகேஷின் மனைவி சொல்லிவந்த நிலையில் இது தொடர்பாக இருவருக்குள்ளும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

BREAKFAST, HUSBAND, WIFE, காலை உணவு, கணவன், மனைவி

மற்ற செய்திகள்