VIDEO: அய்யோ அங்க பாருங்க..! பஞ்சாயத்து ஆபிஸில் இருந்து பேப்பரைக் கவ்விக்கொண்டு ஓடிய ஆடு.. கடைசியில் தெரிய வந்த உண்மை.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து ஆடு ஒன்று பேப்பரை வாயில் கவ்வி கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: அய்யோ அங்க பாருங்க..! பஞ்சாயத்து ஆபிஸில் இருந்து பேப்பரைக் கவ்விக்கொண்டு ஓடிய ஆடு.. கடைசியில் தெரிய வந்த உண்மை.. வைரல் வீடியோ..!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்திலுள்ள சௌபேபூர் பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு வெளியே ஆடு ஒன்று பேப்பரை வாயில் கவ்வியபடி நின்றுள்ளது. இதனை அந்த அலுவலகத்தின் வெளியில் வந்த ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர். முக்கிய ஆவணம் எதையாவது ஆடு எடுத்திருக்கப்போகிறது என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனே ஒரு ஊழியர் வேகமாக சென்று ஆட்டிடம் இருந்து வாயில் இருந்த பேப்பரை பிடுங்க ஓடியுள்ளார். ஆனால் அதற்குள் ஆடு வேகமாக ஓடிச் சென்றுவிட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஆடு ஒன்று பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை வாயில் கவ்வி சென்றதாக தகவல் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சௌபேபூ தொகுதி வளர்ச்சி அலுவலர் மனுலால் யாதவ் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஆடு கவ்வி செல்லவில்லை. அருகில் உள்ள கேன்டினுக்கு வெளியே கிடந்த பேப்பரைதான் ஆடு கவ்விச் சென்றுள்ளது’ என விளக்கம் கொடுத்துள்ளார்.

GOAT

மற்ற செய்திகள்