மாணவன் போல நடித்து விமான நிலையத்தில் பகல் கொள்ளை... ஏமாந்த 100-க்கும் அதிகமான பயணிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாணவன் போல் நடித்து டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் அதிகமான பயணிகளை ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

மாணவன் போல நடித்து விமான நிலையத்தில் பகல் கொள்ளை... ஏமாந்த 100-க்கும் அதிகமான பயணிகள்..!

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விமான நிலையத்தில் பயணிகளை மாணவர் போல நடித்து ஏமாற்றி வந்துள்ளார். கடந்த 4, 5 ஆண்டுகளாக 100-க்கும் அதிகமான பயணிகளை அந்த நபர் ஏமாற்றி வந்ததை போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். அந்நபர் தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார்.

man robbed passengers at delhi airport disguised as a student

மாணவர் ஒருவரை இந்த நபர் ஏமாற்றிய போது அவர் கொடுத்த புகாரின் பெயரில் டெல்லி விமான நிலையத்தில் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் பிடிபட்டார். டெல்லியின் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றின் ஐடி கார்டு உடன் விமான நிலையத்தில் மாணவர் தோற்றத்தில் அந்த நபர் சுற்றி வந்துள்ளார்.

man robbed passengers at delhi airport disguised as a student

தான் சண்டிகரிலிருந்து வருவதாகவும் விசாகப்பட்டினம் செல்வதற்கான இணைப்பு விமானத்தைத் தவற விட்டுவிட்டதாகவும் விமான நிலையத்தில் பதறி அலைந்துள்ளார் அந்த ஏமாற்று நபர். தன்னிடம் அடுத்த விமானப் பயணம் மேற்கொள்ள வெறும் 6,500 ரூபாய் இருப்பதாகவும் விமான டிக்கெட் விலை 15 ஆயிரம் ரூபாய் என்றும் அங்கு காத்திருக்கும் பயணிகளிடம் கோரிக்கை வைப்பாராம்.

man robbed passengers at delhi airport disguised as a student

இதில் நல்ல உள்ளம் கொண்ட சிலர் பணம் கொடுத்து உதவ முன் வந்துள்ளார்கள். அப்படி உதவுபவர்களிடம் கூகுள் பே மூலம் பணத்தை வாங்கிக்கொண்டுள்ளார். தான் ஊருக்குத் திரும்பியதும் பணத்தைத் திருப்பி அளிப்பதாகவும் அந்நபர் உதவுபவர்களிடம் வாக்கு கொடுத்துள்ளார். அப்படி ஒரு முறை மருத்துவ மாணவர் ஒருவரிடம் இந்த ஏமாற்று நபர் தனது நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.

அந்த மருத்துவ மாணவர் பணம் கொடுத்து உதவி உள்ளார். சில நாட்களுக்குப் பின்னர் சொன்னது போல் பணம் திருப்பி அனுப்பவில்லை என ஏமாற்றிய நபரின் போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாணவர் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் மூலமாகவே விமான நிலையத்தில் பகல் கொள்ளையில் ஈடுபடும் அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ROBBERY, விமான நிலையம், மாணவன், AIRPORT, DELHI AIRPORT, ROBBED

மற்ற செய்திகள்