Naane Varuven M Logo Top

ஸ்கூட்டருக்கு Tank Full பண்ண நபர்.. G-pay மூலமாக பணம் அனுப்பும்போது மறந்த விஷயம்.. மெசேஜை பார்த்ததும் மனுஷன் ஆடிப்போய்ட்டாரு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தனது ஸ்கூட்டருக்கு டேங்க் ஃபுல் செய்த நபரிடம் 55,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஸ்கூட்டருக்கு Tank Full பண்ண நபர்.. G-pay மூலமாக பணம் அனுப்பும்போது மறந்த விஷயம்.. மெசேஜை பார்த்ததும் மனுஷன் ஆடிப்போய்ட்டாரு..!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

இணையத்தின் வளர்ச்சி அதிகரித்ததன் பலனாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சாத்தியமாகியுள்ளது. இதன் காரணமாக தேவையில்லாமல் கையில் அதிக தொகையினை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருக்கிறது. யூபிஐ ஐடி மூலமாக நொடிப்பொழுதில் கட்டணத்தை செலுத்திடவும் முடிகிறது. இதன் காரணமாகவே சிறிய கடைகள் துவங்கி மால்கள் வரை ஜி-பே போன்ற யூபிஐ மூலமாக பணம் செலுத்தும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துவருகிறது. ஆனால், மக்கள் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவால் சில நேரங்களில் பணப்பரிவர்த்தனையில் சிரமம் ஏற்படத்தான் செய்கிறது.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் விநோதமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. தானேவில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சில தினங்களுக்கு முன்னர் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றிருக்கிறார். டேங்க்கை நிரப்பிய அவர் ஜி-பே மூலமாக பணம் செலுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவருக்கு கட்டணமாக 550 ரூபாய் வந்திருக்கிறது.

மெசேஜ்

இதனையடுத்து அங்கிருந்த QR கோடை அவர் ஸ்கேன் செய்திருக்கிறார். அப்போது அவருக்கு கட்டணமாக 55,000 காட்டியிருக்கிறது. ஆனால், அதனை கவனிக்காத அந்த வாடிக்கையாளரும் பணப்பரிவர்த்தனையை முடித்திருக்கிறார். 550 ரூபாய்க்கு பதிலாக, 55,000 ரூபாய் கட்டணமாக செலுத்திய நிலையில் அவர் வீட்டுக்கு திரும்பும்போது இதுகுறித்த மெசேஜ் வந்திருக்கிறது.

மெசேஜை பார்த்து ஒருகணம் திகைத்துப்போன அந்த நபர் என்ன நடந்தது எனப்புரியாமல் திகைத்திருக்கிறார். இறுதியில் பெட்ரோல் பங்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதை மெசேஜ் மூலமாக அறிந்த அவர், அந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். உடனடியாக விஷயத்தை அறிந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அவருக்கான கட்டணம் போக மீதமுள்ள தொகையை அடுத்தநாள் வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியிருக்கின்றனர்.

இந்நிலையில், 55,000 ரூபாய்க்கு அவர் பணப்பரிவர்த்தனை செய்த பில்-ன் புகைப்படம் சமூகவலை தளங்களில் பலராலும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

PETROL, MAHARASHTRA, UPI

மற்ற செய்திகள்