"அப்பாவா ப்ரோமோஷன்".. பிறந்த மகளை பார்த்துக்க பெரிய பதவியில் இருந்த வேலையை உதறிய தந்தை!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.
மிகவும் பக்குவமாக அந்த குழந்தையை வளர்த்தெடுத்து மெல்ல மெல்ல சமுதாயத்தில் ஒரு சிறந்த குழந்தையாகவும் அதனை மாற்றுவதில் பெற்றோர்களின் பங்கு பெரியது.
அதிலும் ஆரம்ப கட்டத்தில் பெண்கள் தான் மகப்பேறு விடுப்பு எடுத்து குழந்தைக்கு அருகில் இருந்து பார்த்துக் கொள்வதை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வாலிபர் ஒருவர், குழந்தை பிறந்ததையொட்டி எடுத்த முடிவு, இணையத்தில் அதிகம் பேசும் பொருளாக மாறி உள்ளது.
ஐஐடி கரக்பூரில் படித்துவிட்டு முன்னணி நிறுவனம் ஒன்றில் சீனியர் துணைத் தலைவராகவும் இருந்து வந்தவர் அன்கிட் ஜோஷி.
அன்கிட் - அகான்ஷா தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. Spiti என இந்த குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதனை பார்த்து கொள்ள அகான்ஷா மெட்டர்னிட்டி விடுமுறையில் இருந்துள்ளார். ஆனாலும், தந்து குழந்தையை அருகே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என அன்கிட்டும் முடிவு செய்துள்ளார்.
முன்னணி நிறுவனம் ஒன்றின் துணை தலைவராக அன்கிட் இருந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தனது மகளுக்காக அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பேசும் அன்கிட் "சில நாட்களுக்கு முன்பு தான் எனது மகள் பிறந்தாள் என்பதால் அதிகளவு சம்பளம் வரும் என்னுடைய வேலையை விட்டேன். இது வினோதமான ஒரு முடிவு தான். பலரும் மிக கஷ்டமான நாட்களை நீங்கள் சந்திக்க போகிறீர்கள் என என்னிடம் அறிவுறுத்தினார்கள். ஆனால், எனது மனைவி என் முடிவுக்கு பக்கபலமாக இருந்தார்.
ஸ்பிதி பிறந்த பிறகு எங்கள் வாழ்க்கை மனம் நிறைவு பெற்றது போல் இருக்கிறது. என் மகள் பிறப்பதற்கு முன்பாகவே பேட்டர்னிட்டி விடுப்பை தாண்டி அவளுடன் என் நாட்களை கழிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். என் மகளை பார்த்துக் கொள்ள ஒரு பிரேக் வேண்டும் என தோன்றியது. ஆனால் நான் செய்து வரும் பணியில் வெவ்வேறு நகரங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய நிலை இருந்ததால் நிறுவனத்தில் பிரேக் கிடைக்காது என்பதால், வேலையை ராஜினமா செய்து விட்டு மகளை பார்த்துக் கொள்ள முடிவு செய்தேன். தந்தையாக புதிய பதவி கிடைத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
அதே போல, மகளுக்கு தாலாட்டு பாடுவது, இரவில் தூங்க வைப்பது உள்ளிட்ட பணிகளையும் அன்கிட் கவனித்து வருகிறார். சில மாதங்கள் கழித்த் வேலைக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ள அன்கிட், தான் பரபரப்பாக வேளையில் இயங்குவதை விட மகளை பார்த்துக் கொள்வது நிறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெரிய முன்னணி நிறுவனத்தில் வேளையில் இருந்த போதும் மகளுக்காக வாலிபர் எடுத்த முடிவு, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்