‘4 பேருக்காக வந்த விமானம்’.. வாடகை எவ்ளோனு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க.. மிரளவைத்த தொழிலதிபர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநான்கு பேர் மட்டுமே பயணிக்க 180 இருக்கைகள் கொண்ட விமானத்தை 20 லட்சம் கொடுத்து வாடகைக்கு எடுத்த தொழிலதிபரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த மதுபான தொழிற்சாலை அதிபரின் மகள் மற்றும் அவரின் குழந்தைகள் ஊரடங்கால் போபாலில் சிக்கிக் கொண்டது. ஆனால் குடும்பத்தினர் அனைவரும் டெல்லியில் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித போக்குவரத்து சேவைகளும் இல்லாததால் போபாலிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இதனால் தனது மகள், அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் பணிப்பெண் ஒருவர் ஆகிய 4 பேரை டெல்லிக்கு அனுப்பி வைக்க ஏ-320 என்ற விமானத்தை அந்த தொழிலதிபர் வாடகைக்கு எடுத்துள்ளார். 180 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தின் வாடகை சுமார் 20 லட்சம் இருக்கும் என விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விமானம் கடந்த திங்கள்கிழமை டெல்லியில் இருந்து போபாலுக்கு சென்று அவர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் டெல்லி சென்றது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் 4 பேருக்காக விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற விவரங்களை விமான அதிகாரிகள் வெளியிடவில்லை.
மற்ற செய்திகள்




