VIDEO: மற்றுமொரு சாத்தான்குளம் சம்பவம்: ‘போலீஸ் தாக்குதலால் ‘டீன் ஏஜ்’ இளைஞன் அதிர்ச்சி மரணம்..? - பின்னணி என்ன?.. வெளியான பரபரப்பு தகவல்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் போலீசாரால் தாக்கப்பட்ட 19 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்த சம்பவத்தின் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது.

VIDEO: மற்றுமொரு சாத்தான்குளம் சம்பவம்: ‘போலீஸ் தாக்குதலால் ‘டீன் ஏஜ்’ இளைஞன் அதிர்ச்சி மரணம்..? - பின்னணி என்ன?.. வெளியான பரபரப்பு தகவல்கள்..!

கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் 19 வயது சாகர் இளைஞரை போலீசார் லத்தியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், எஸ்.எஸ்.எல்.சி கணக்கு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும்போது, தனது நண்பருக்கு உதவுவதற்காக விடை தாள்களை சாகர் தூக்கி வீசியதாகவும், அதை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்தது இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞரின் குடும்பத்தினர், அவர் சகோதரியை விட சென்றதாகவும், அவர் எந்தவித முறைகேட்டுலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் போலீசார் தாக்கியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. தென்காசியிலும் போலீசார் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகாவில் போலீசார் நடத்திய தாக்குதலில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அங்கு மக்கள் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்