'8 வருஷ காதல்'... அதுக்காக 'நான் எந்த எல்லைக்கும் போவேன்'... இளைஞர் எடுத்த முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காதலியை திருமணம் செய்ய காதலன் நடத்திய உண்ணாவிரத போராட்டம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

'8 வருஷ காதல்'... அதுக்காக 'நான் எந்த எல்லைக்கும் போவேன்'... இளைஞர் எடுத்த முடிவு!

பொதுவாக அரசியல் கட்சிகள் தான் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.ஆனால் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்,தனது காதலிக்காக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியது,பலரது புருவதையும் உயர்த்தியுள்ளது.மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஆனந்த பர்மன். இவருக்கும் பர்மனின் பக்கத்து ஊரை சேர்ந்த லிப்பிக்கா என்ற பெண்ணிற்கும் காதல் அரும்பியது. சந்தோசமாக சென்ற இவர்களது காதல் வாழ்க்கையில்,திடீரென பர்மனுடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் லிப்பிக்கா துண்டித்து கொண்டார்.

என்ன காரணம் என்ன தெரியாமல் தவித்து வந்த அவர், லிப்பிக்காவை சமூகவலைத் தளங்களில் தொடர்பு கொள்ள முயன்றும் அது பயனற்று போனது. இதனிடையே தனது காதலி லிப்பிக்காவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த அவர் அதிர்ந்து போனார்.என்ன செய்வது என தெரியாமல் தவித்த அவர், லிப்பிக்காவின் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றார்.இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் தனது காதலியின் வீட்டிற்கு முன்பாக அமர்ந்து உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டார்.

''என்னுடைய காதலை திரும்ப கொடு,என்னுடைய 8 வருடத்தை திரும்ப கொடு'' போன்ற பதாகைகளுடன் லிப்பிக்காவின் வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட, பலரும் பர்மனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர்,பர்மனுடையே போராட்டத்தை கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்தினர்.இதற்கிடையே லிப்பிக்காவை திருமணம் செய்ய இருந்த மணமகனின் குடும்பத்தாரும் லிப்பிக்காவின் வீட்டிற்கு வந்தனர்.நேரம் செல்ல செல்ல பர்மனின் உடல்நிலை மோசமானது.

இதையடுத்து லிப்பிக்காவின் ஊரை சேர்ந்த பிரமுகர்கள் அவரின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள்.இதையடுத்து லிப்பிக்கா தனது காதலன் ஆனந்த பர்மனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.மேலும்  லிப்பிக்காவின் குடும்பத்தினரும் இந்த திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார்கள்.

8 வருடமாக காதலித்த பெண்ணை உண்ணாவிரதம் இருந்து கரம் பிடித்த இளைஞர் ஆனந்த பர்மனை,அந்த கிராமத்தை சேர்ந்த பலரும் பாராட்டினார்கள்.

KOLKATA, WEST BENGAL, GIRLFRIEND, ANANTA BURMAN, FAST AND DHARNA