'அந்த பையனுக்குப் பயம் இல்ல'...'ராஜநாகத்தைத் தண்ணீர் ஊற்றி கூல் செஞ்ச இளைஞர்... தெறிக்க விடும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜநாகம் ஒன்றை இளைஞர் ஒருவர் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதை யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்று வனத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
கோடைக் காலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மக்கள் பலரும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதே போன்று மிருகங்களையும் வெயிலின் கொடுமை விட்டு வைக்கவில்லை. பொதுவாகக் காடுகளில் தண்ணீர் தேடி அலையும் மிருகங்களுக்காக, அங்கங்கே தண்ணீர் தொட்டி அமைத்து அவற்றின் தண்ணீர் தேவையை வனத்துறையினர் பூர்த்தி செய்வது வழக்கம்.
ஆனால் வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், பார்க்கவே பயங்கரமா இருக்கும் ராஜநாகத்திற்கு இளைஞர் ஒருவர் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டுகிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்த அதிகாரி, ''இது கோடைக் காலம், இதை யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால் இது அபாயகரமானது, யாரும் முயற்சிக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவித சலனமும் இன்றி அந்த இளைஞர் ராஜநாகத்தைக் குளிப்பாட்டும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Summer time..
— Susanta Nanda IFS (@susantananda3) May 24, 2020
And who doesn’t like a nice head bath🙏
Can be dangerous. Please don’t try. pic.twitter.com/ACJpJCPCUq
மற்ற செய்திகள்