விபத்தில் கணவரை இழந்த பெண்.. 45 வயதில் மகன் முன்னிலையில் நடந்த மறுமணம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஒன்றை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 23).

விபத்தில் கணவரை இழந்த பெண்.. 45 வயதில் மகன் முன்னிலையில் நடந்த மறுமணம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

Also Read | "செருப்பு மட்டும் தான் டார்கெட்".. Flat ஏறி திருடும் கும்பல்.. சிசிடிவியில் சிக்கிய உண்மை.. திடுக்கிடும் பின்னணி!!

இவரது தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, யுவராஜின் தாய் ரத்னா தனியாளாக வேலை செய்து சம்பாதித்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளதாக தெரிகிறது.

அப்படி இருக்கையில், கணவரை இழந்த பிறகு ரத்னாவை அவரது உறவினர்கள் யாரும் எந்தவித நல்ல காரியங்களுக்கும் அழைக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து பேசும் யுவராஜ், தனக்கு 18 வயதாக இருக்கும் போது தந்தை இறந்தது பேரதிர்ச்சியாக இருந்தது என்றும் மரணத்தால் தனது தாய் மிகவும் பாதிக்கப்பட்டு தனியாக போராடினார் என்றும் குறிப்பிட்டார். மேலும் சமூதாய ரீதியாக புறக்கணிக்கப்பட்ட தனது தாயார் ரத்னாவை சில நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை கூட பலர் தவிர்த்தது அவரை மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி இறந்தால் ஆண்கள் மறுமணம் செய்யலாம் என்ற சூழலில், பெண்களும் அப்படி செய்யலாம் என்ற சூழலில் தனது தாய்க்கும் மறுமணம் செய்து அவருக்கு நேர்ந்த துயரை துடைக்க வேண்டும் என யுவராஜ் முடிவு செய்துள்ளார். தனது நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மூலம் அம்மாவுக்கு மற்றொரு துணையையும் தேடி வந்துள்ளார் யுவராஜ். அப்போது மாருதி கணவத் என்ற நபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. மேலும் அவர் ரத்னாவை திருமணம் செய்யவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

Man gets his widowed mother remarried people praised

இதனிடையே, மறைந்து போன தனது கணவரை மறந்து விட்டு வேறொரு நபரை திருமணம் செய்யவும் முதலில் ரத்னா மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இனி வாழ்நாள் முழுவதும் தனியாக வாழ வேண்டுமா என்பதை பலமுறை ஆலோசித்து பின்னர் மறுமணத்திற்கு அவர் சம்மதம் சொன்னதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து பேசும் மாருதி கணவத், கடந்த சில ஆண்டுகளாக தான் தனியாக வசித்து வருவதாகவும் ரத்னாவை சந்தித்து பேசிய பிறகு அவரின் குடும்பத்துடன் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என நினைத்து திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதியில், மகன் யுவராஜ் முன்னிலையில் அவரது தாயார் ரத்னா மற்றும் மாருதி கணவத் ஆகியோரின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

Also Read | "ஸ்லோவா வந்து சேருறதுக்கும் ஒரு நேரம், காலம் வேணாமா?"... 27 வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்த லெட்டர்!!

MAN, WIDOWED MOTHER, REMARRIAGE

மற்ற செய்திகள்