'ஒரு பக்கம் லாக்டவுன் பயம்'... 'ஆனா மக்களே இப்படி இருந்தா எப்படி'?... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த வருடம் உலகையே புரட்டிப் போட்ட கொரோனா, தற்போது பல பிறழ்வுகளாக உருமாறி இன்னும் மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 1,30,60,542 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,67,642 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை 1,19,13,292 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9,79,608 ஆக இருக்கிறது.
இதனால் அரசு முதற்கொண்டு பல பிரபலங்கள் வரை வைரஸ் பரவாமல் தடுக்க அடிப்படை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுமாறு மக்களை மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் மக்களுக்கு கொரோனா மீதான அச்சம் குறைந்து விட்டதோ என நினைக்கும் அளவிற்குப் பலரது நடவடிக்கைகள் உள்ளது. பலரும் முகக்கவசங்கள் அணிவது , சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிப்பதைக் கைவிட்டனர்.
இதன் காரணமாகவே தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதுதொடர்பான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மீறுகிறார்கள் என்பது குறித்த தனது எண்ணங்களையும் அந்த பதிவில் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் ஒரு அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகளிடையே சமூக விலகலை ஏற்படுத்த ஒரு கண்ணாடி தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு கவுண்டரில் நின்றுகொண்டிருந்த மனிதர் கண்ணாடி தடுப்பில் அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவ ஓட்டையில் தன் தலை பாதியை நுழைத்து அலுவலக அதிகாரியை எட்டிப் பார்க்கும் படத்தை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து மக்கள் எந்த அளவிற்கு அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்பது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்