Battery Mobile Logo Top

வீட்டு வாசல்ல கிடந்த வயர்.. எடுக்கப்போன அப்பா... மகன் கண்முன்னாடியே நடந்த துயரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி மகன் கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழத்தியுள்ளது.

வீட்டு வாசல்ல கிடந்த வயர்.. எடுக்கப்போன அப்பா... மகன் கண்முன்னாடியே நடந்த துயரம்..!

Also Read | "சாக்ஸையும் கழட்டுங்க".. விமான பயணி மீது வந்த சந்தேகம்.. செக் பண்ண ஆபிசரே அரண்டு போய்ட்டாரு.. தீயாய் பரவும் வீடியோ..!

மழை

இந்தியாவில் தென்மேற்கு பருவழமை தீவிரமடைந்து வருகிறது. கேரளா, கொங்கன் கடற்கரை, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் கடும் மழை பெய்துவருகிறது. இதனால், மக்களின் இயல்புநிலை பாதித்து வருகிறது. இந்நிலையில், இந்த மாநிலங்களில் காற்றும் அதிவேகமாக வீசிவருவதால் ஆங்காங்கே மின்வெட்டு நிலவுகிறது. காற்றின் காரணமாக மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டு சாலைகளில் விழுவதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு உள்ளூர் நிர்வாகங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் மகன் கண்முன்னே தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

உத்திர பிரதேச மாநிலம் அவுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாபுசராய் கிராமத்தை சேர்ந்தவர் பராஸ் நாத் படேல். இவர் நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டு வாசலில் மின்சார வயர் ஒன்று கிடப்பதை அவர் பார்த்திருக்கிறார். அதனை அகற்ற நினைத்த அவர் மரக்குச்சி மூலமாக வயரை தூக்கியுள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்த மகனும் வெளியே வந்திருக்கிறார்.

Man electrocuted to death after touching live wire

அதிர்ச்சி

இதனிடையே மரக்குச்சியால் வயரை அகற்ற முயற்சித்திருக்கிறார் படேல். அப்போது துரதிருஷ்டவசமாக வயர் மீது அவரது கை பட்டிருக்கிறது. இதனால் மின்சாரம் பாய்ந்து அவர் மயக்கமடையவே, அவரை காப்பாற்ற ஓடிச் சென்றிருக்கிறார் அவரது மகன். இதனால் அவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்தினர் தந்தை மற்றும் மகன் இருவரையும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும், படேல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து படேலின் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த பகுதி தாசில்தார் சுனில் குமார் சரோஜ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயிரிழந்த படேலின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் சரோஜ் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் மகன் கண்முன்னே தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | பூமிக்கடியில 15 ஆயிரம் டன்-க்கும் அதிகமா இருக்கு.. இந்தியாவுக்கே அடிச்ச ஜாக்பாட்.. மத்திய அரசின் அசத்தல் முடிவு.. முழு விபரம்..!

UTTARPRADESH, ELECTROCUTED, LIVE WIRE

மற்ற செய்திகள்