'வருசத்துக்கு 75 கோடி ரூபாய் சம்பாத்தியம்...' 'கொரோனா பாஸிடிவ் வந்தப்போவே அந்த எண்ணம் வந்திடுச்சு...' - ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி எடுத்துள்ள முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாரிலையன்ஸ் நிறுவனத்தில் வருடத்திற்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் அனைத்தையும் துறந்து ஜைன மத துறவியாக மாறியுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் பெரும் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தவர் பிரகாஷ் ஷா. அந்த நிறுவனத்தில் திட்டப் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றி வவந்தார்.
கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே தான் இதுவரை வாழ்ந்து வந்த ஆடம்பர வாழ்க்கையைத் துறந்தார். கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அன்றது வெள்ளை ஆடை உடுத்தி ஜைன துறவிக்கான தீட்சையை பெற்ற இவருடன் மனைவி நைனா ஷாவும் துறவி ஆகியுள்ளார். நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறும்போது இவரது ஆண்டு வருமானம் 75 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
ரசயான பொறியியலில் பிடெக் மற்றும் எம்டெக் படித்து ஐஐடி மும்பையில் பட்டம் பெற்றுள்ளார். இவரது இளையமகன் ஏழு வருடங்களுக்கு முன்பே தனது 24-வது வயதில் ஜைன துறவியாக மாறியுள்ளார்.
மற்ற செய்திகள்