VIDEO: 5 வயசு மகனுடன் ‘கிரிக்கெட்’ விளையாடிய அப்பா.. நொடியில் நடந்த சோகம்.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத்தில் மகனுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென மாரடைப்பு வந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: 5 வயசு மகனுடன் ‘கிரிக்கெட்’ விளையாடிய அப்பா.. நொடியில் நடந்த சோகம்.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சி..!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பாதார் பகுதியை சேர்ந்தவர் விஜய் ரமேஷ்சந்த்ரா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பணியாற்றி வந்தார். தற்போது ஊடங்கு அமலில் உள்ளதால் தனது 5 வயது மகனுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு வந்து நிலைகுலைந்த அவர், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் மீது மோதி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே விஜய் ரமேஷ்சந்த்ராவை மீட்டு முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால்  மாரடைப்பால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TRENDING NEWS

மற்ற செய்திகள்