ஆற்றில் மிதந்த BMW கார்.. அதிர்ந்த மக்கள்.. "போலீஸ் வந்து விசாரிச்சதுல.." கண்கலங்க வைக்கும் காரணம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆற்றில் BMW கார் ஒன்று மிதந்து கொண்டு வருவதாக போலீசாருக்கு விவரம் தெரிய வர, நேரில் சென்று விசாரித்த போது, பல உருக்கமான தகவல்கள் தெரிய வந்தது.

ஆற்றில் மிதந்த BMW கார்.. அதிர்ந்த மக்கள்.. "போலீஸ் வந்து விசாரிச்சதுல.." கண்கலங்க வைக்கும் காரணம்

Also Read | "என்ன 500ரூபா நோட்டு வித்தியாசமா இருக்கு?".. கடைக்காரருக்கு வந்த சந்தேகம்.. வசமாக சிக்கிய பலே திருடன்..!

கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே அமைந்துள்ள காவிரி ஆற்றில், BMW கார் ஒன்று மிதந்து கொண்டே வந்துள்ளது.

இதனைக் கண்ட மக்கள் மற்றும் அப்பகுதி மீனவர்கள், சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கும் அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

ஆற்றில் மிதந்த BMW கார்

இதனைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், அப்பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். காரில்  யாராவது உள்ளார்களா என்பதை அறிய, நீரில் இறங்கி தீயணைப்பு துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது, காரில் யாரும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதன் பின்னர், அந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனர்.

man depressed by mother death dumps bmw car in river

ஒண்ணுமே பேசல..

மேலும், மீட்கப்பட்ட இந்த BMW X6 காரின் விலை, சுமார் 1.3 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கார் எப்படி ஆற்றில் மிதந்து வந்திருக்கும் என்பது குறித்து, போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். காரின் எண் மூலம், அதன் உரிமையாளர் யார் என்பது பற்றி போலீசார் தகவலறிந்து கொண்டனர். மேலும், காரின் உரிமையாளரை கண்டுபிடித்து, அவரிடம் போலீசார் இது பற்றி  கேட்ட போது, அவர் எதுவும் கூறாமல் வேதனையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

உறவினர்கள் சொன்ன தகவல்

இதன் காரணமாக, அவரது உறவினர்களை அழைத்து போலீசார் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது தான், உண்மை என்ன என்பது தெரிய வந்தது. அந்த கார் உரிமையாளரின் தாய், அண்மையில் காலமாகி விட்டதாகவும், இதன் பின்னர் அந்த நபர் அதிக மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அனைத்தையும் வெறுத்து வாழ்ந்து வந்த நபர், வெளியே காரில் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.

man depressed by mother death dumps bmw car in river

அப்போது, அவரிடம் கார் எங்கே என கேட்ட போது, அதனை ஆற்றில் மூழ்கடித்து விட்டு வந்தது பற்றியும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தாயின் மரணம் காரணமாக, மன அழுத்தத்தில் இருந்த நபரை போலீசார் தொடர்ந்து விசாரிக்காமல், எந்த வழக்கும் பதிவு செய்யாமல், உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

மேலும், மீட்கப்பட்ட அந்த BMW காரை அந்த நபரின் உறவினர்களிடம் ஒப்படைத்தாகவும் கூறப்படுகிறது.

Also Read | இனி விமானம் மாதிரி ரயிலையும் லக்கேஜுக்கு கட்டணம்.. எத்தனை கிலோ வரை இலவசமா எடுத்துட்டு போகலாம்..? முழு விவரம்..!

MAN, MOTHER DEATH, BMW CAR, RIVER, DUMPS BMW CAR IN RIVER

மற்ற செய்திகள்