‘தந்தை இறந்த நிலையில், இறுதிச்சடங்கை முடித்த கையோடு வந்து வாக்களித்த நபர்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜனநாயகக் கடமைகளுள் முக்கியமானதும் முதன்மையானதுமாக பார்க்கப்படும் ஒன்றுதான் வாக்குரிமை.
பொதுவாகவே வாக்களிக்கும் தமது உரிமையையும், கடமையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கும் பலரும், வெகுதூரம் சென்றாவது வாக்களிக்க முனைவதுண்டு. அதற்காக அலுவலக வேலைகளைத் தள்ளிவைத்துவிட்டு, வாக்களிக்கும் எண்ணத்தில் பயணங்களையும் மேற்கொள்வர்.
அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்திய ஜனநாயக பொதுத் தேர்தல் என்பதால், இந்த தேர்தல்தான் பிரதமரை தீர்மானிக்கிறது என்பதால், அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியத் துணைக்கண்டத்தின் பொருளாதாரச் சூழலை தீர்மானிக்கிறது என்பதால் இந்த தேர்தலில் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை பலரும் உணருகின்றனர்.
அதனாலேயே திரைப்பிரபலங்களும், பெரும் பணக்காரர்களும், பிரபல வீரர்களும், தொழிலதிபர்களும், அரசியலாளர்களும் வாக்களிக்க நேரடியாக செல்கின்றனர். இதிலும் பலர் திருமணம் போன்ற சடங்குகளை முடித்த கையோடு வந்து வாக்களித்ததுமுண்டு.
இந்த நிலையில் வட இந்தியாவில் 7 மாநில தேர்தல்கள் நடைபெற்றுவருகின்றன. இதில் 5-ஆம் கட்டமாக மத்தியப்பிரதேசத்தின் சத்தார்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வாக்காளர் ஒருவர் , மூப்பு காரணமாக இயற்கை எய்திய தனது தந்தையின் இறுதிச்சடங்கை முடித்த கையோடு வந்து வாக்குப்பதிவு செய்துள்ளது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.