இறந்ததா நெனச்சு அடக்கம் செஞ்ச நபர்.. வீடியோ காலில் தோன்றியதால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக தண்டவாளத்தை கடக்கும்போது ஒரு நபர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக சொல்லப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "தடயத்தை மறைச்சே ஆகணுமே".. ஷ்ரத்தா எலும்பை எடுத்து.. அஃப்தாப் செஞ்ச பதற வைக்கும் காரியம்!!
அப்படி இருக்கையில் அவரின் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாததால் இறந்தவர் உடலின் புகைப்படத்தை வெளியிட்டு அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், அந்த உடல் தனது சகோதரர் ஆன ரபீக் சேக் என்பவருடையது என தெரிவித்துள்ளார் ஒரு நபர். ஆட்டோ டிரைவரான ரபீக் சேக், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாகவும் இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதற்கடுத்து கேரளாவில் உள்ள ரபீக் சேக்கின் மனைவியிடம் இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் பால்கர் பகுதிக்கும் வந்துள்ளார்.
தொடர்ந்து உடலை நேரில் பார்த்து அது தனது கணவர் தான் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அவரது உடலும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட அனைத்து சடங்குகளும் முடித்து பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரபீக் சேக்கின் நண்பர் ஒருவர், அவரது தொலைபேசி எண்ணுக்கு எதேச்சையாக அழைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது போன் எடுத்தவர், ரபீக் சேக் பேசுகிறேன் என கூறியதுமே கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் அவரது நண்பர். முதலில் போன் வழியாக அழைத்திருந்த நிலையில், திருப்பி வீடியோ கால் செய்து ரபீக் சேக் தானா என்பதை உறுதி செய்ய அவரது நண்பர் அழைத்துள்ளார்.
அவர் தான் என்பது உறுதியான சூழலில், ரபீக் சேக் தனது நண்பருடன் கலகலப்பாக உரையாடியதுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது நண்பர் ரபீக் சேக்கின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியது பற்றி தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ரபீக் சேக் உயிருடன் இருப்பது பற்றி அறிந்ததும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்து போயினர்.
அதே வேளையில், ரபீக் சேக் என நினைத்து வேறொருவர் உடலுக்கு இறுதி சடங்கு செய்து புதைத்த நிலையில், இது பற்றி ரெயில்வே போலீசாரிடமும் அவர்கள் விவரத்தை தெரிவித்துள்ளனர். ரபீக் சேக் மீண்டும் வந்ததால் உயிரிழந்தது யார் என்பதை அறிந்து கொள்ளவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read | ரொம்ப நாள் கழிச்சு MS தோனி பகிர்ந்த வீடியோ.. கொஞ்ச நிமிசத்துலயே லட்சத்தை தாண்டிய லைக்ஸ்.. Viral!!
மற்ற செய்திகள்