80'ஸ் கிட்ஸிடம் ஏமாந்த 40-க்கும் மேற்பட்ட பெண்கள்.. அத்தனை பேரையும் ஏமாற வைத்த ‘ஒற்றை’ பொய்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேட்ரிமோனி வலைத்தளம் மூலமாக பழகி திருமணம் செய்வதாக பல பெண்களை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரை சேர்ந்தவர் அனுராக் சாவான் (வயது 34). பி.டெக், எம்பிஏ முடித்துள்ள இவர் மேட்ரிமோனி வலைதளம் மூலம் 40-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணத்தை ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது. பெண் பார்க்க செல்லும் இடத்தில் பிரபலமான செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். அப்போது ஐபோன் வாங்கி தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றியுள்ளார். இவர் மீது 2 மோசடி வழக்குகளும், ஒரு பாலியல் பலாத்கார வழக்கும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர் மீது 28 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், மேட்ரிமோனி வலைதளம் மூலம் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அனுராக் சாவான் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது வீட்டுக்கு பெண் பார்க்க சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் வெளியே சுற்றிக் கொள்ளும் அளவிற்கு நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.
அப்போது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி அப்பெண்ணிடம் அனுராக் சாவான், ரூபாய் 2.25 லட்சம் வாங்கியுள்ளார். இதனை அடுத்து அப்பெண்ணை சந்திப்பதை அனுராக் சாவான் குறைத்துள்ளார். அப்பெண் போன் செய்தாலும் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் அனுராக் சாவான் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து அனுராக் சாவானின் செல்போன் நம்பரை கொண்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது கடந்த 2017-ம் ஆண்டு 17 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அப்போது அந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு ஜாமீனில் அனுராக் சாவான்வெளியே வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்