"கொண்டாடுனா இப்டி தான்யா பிறந்தநாள் கொண்டாடணும்.." மனம் உருகும் நெட்டிசன்கள்.. "அப்டியே கண்ணு முன்னாடியே நிக்குது.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக, நம் பலருக்கும் நமது பிறந்த நாளை மிக மிக வித்தியாசமான முறையில் விமரிசையாகவோ அல்லது மிகவும் சாதாரணமாக, அதே வேளையில் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் வகையிலோ கொண்டாட வேண்டும் என நினைப்போம்.

"கொண்டாடுனா இப்டி தான்யா பிறந்தநாள் கொண்டாடணும்.." மனம் உருகும் நெட்டிசன்கள்.. "அப்டியே கண்ணு முன்னாடியே நிக்குது.."

அப்படி இளைஞர் ஒருவர், தனது பிறந்த நாளை மனம் உருகும் வகையில் கொண்டாடியது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் பலர் இதயத்தையும் நெகிழ செய்துள்ளது.

விஹாயஸ் எனப்படும் நபர் ஒருவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, தற்போது வரை சுமார் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அதிகம் வைரல் ஆகி வருகிறது.

இளைஞர் எடுத்த முடிவு

விஹாயஸ் குறிப்பிட்டுள்ள கேப்ஷன் மற்றும் பகிர்ந்துள்ள வீடியோவின் படி, அவர் தினமும் சாலையில் நடந்து செல்லும் போது, அப்பகுதியிலுள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இருந்து, இளைஞர் ஒருவர் சிரித்த படி, விஹாயஸை நோக்கி கையசைப்பார். தினந்தோறும் சிரித்த முகத்துடன் நிற்கும் இளைஞரை கடந்து செல்லும் விஹாயஸ், தனது பிறந்தநாளன்று அந்த இளைஞரை நேரில் சந்தித்து, கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார்.

மனசு ஒடஞ்சு போச்சு'ங்க..

இதற்காக, அவரது தோழியான மிதுலா என்பவருடன் கேக் வாங்கிக் கொண்டு, அந்த வாலிபரின் வீட்டைத்  தேடி சென்றுள்ளார் விஹாயஸ். அந்த இளைஞரின் வீடு தெரியாது என்பதால், அபார்ட்மெண்ட்டில் அவர்கள் சிரமப்பட்டதும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். கடைசியில், வீடு கண்டுபிடித்து விஹாயஸ் மற்றும் மிதுலா ஆகியோர் உள்ளே சென்றதும், அந்த வாலிபர் உற்சாகம் அடைந்ததாகவும் விஹாயஸ் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, கேக் வெட்டி அந்த வாலிபருக்கு அளித்த விஹாயஸ், அந்த வாலிபரின் பெயர் சிண்டு என்பதையும் தெரிந்து கொண்டார். அவருக்கு பேச வராது என்பதால், தன்னுடைய ஸ்டைலில் விஹாயஸுக்கு வாழ்த்துக்களை கூறியதோடு, சில பேஷன் டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார். மேலும், விஹாயஸ் மற்றும் மிதுலாவை தனது சகோதரர் மற்றும் சகோதரிகளாக சிண்டு குறிப்பிடுவதாக அவரின் தாயார் தெரிவித்தார்.

தாங்கள் சிறந்த நண்பரை உருவாக்கிக் கொண்டதாகவும் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ள விஹாயஸ், தனது சிறந்த பிறந்த நாள் வாழ்த்து இது தான் என்றும் சிண்டுவின் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

 

நெட்டிசன்கள் பலரையும் இந்த வீடியோ மனம் உருக வைத்துள்ள நிலையில், பல உருக்கமான கருத்துக்களையும் விஹாயஸ் செயல்பாடு குறித்து தெரிவித்து வருகின்றனர்.

BIRTHDAY, HEARTWARMING

மற்ற செய்திகள்