சாதாரண செருப்புக்குள்ள 69 லட்சம்.. ஏர்போர்ட் அதிகாரிகளையே அதிர வச்ச ஆசாமி.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு விமான நிலையத்தில் செருப்புக்குள் வைத்து தங்கம் கடத்த முயன்ற பயணியை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

சாதாரண செருப்புக்குள்ள 69 லட்சம்.. ஏர்போர்ட் அதிகாரிகளையே அதிர வச்ச ஆசாமி.. வைரலாகும் வீடியோ..!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | தன்னைத் தானே திருமணம் செஞ்ச பெண்.. போஸ்ட் போட்ட 24 மணி நேரத்துல எடுத்த பரபர முடிவு!!..

கடத்தல்

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை கடத்திவரும் நபர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் கடத்தல் நபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி கைதானவர்கள் கடத்தலுக்கு உபயோகிக்கும் வழிமுறைகள் மிகவும் வித்தியாசமானவையாக இருக்கும்.

Man Caught Trying To Smuggle Gold In Slippers At Bengaluru Airport

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் செருப்பில் வைத்து தங்கம் கடத்த முயன்ற பயணியை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். பேங்காக்கில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவரை வழக்கமான முறையில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது. அவருடைய செருப்பை ஸ்கேன் செய்தபோது உள்ளே வித்தியாசமான பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

  69.40 லட்ச ரூபாய்

இதனையடுத்து செருப்பை பிரிக்க உள்ளே நான்கு தங்க கட்டிகள் இருந்திருக்கின்றன. அதன் எடை 1.2 கிலோ எனவும் அதன் சந்தை மதிப்பு  69.40 லட்ச ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள சுங்கத்துறை அதிகாரிகள்,"பேங்காக்கில் இருந்து பெங்களூரு வந்த பயணி ஒருவரை சோதித்தோம். அவருடைய செருப்பில் 4 தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது" எனத தெரிவித்திருக்கின்றனர்.

Man Caught Trying To Smuggle Gold In Slippers At Bengaluru Airport

Images are subject to © copyright to their respective owners.

பயணியை விசாரிக்கும்போது அவருடைய ஆவணங்களை பார்த்த பிறகு அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து அவரை பரிசோதிக்கும்போது தான் அவர் தங்க கடத்தலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து சுங்க சட்டத்தின்படி அவரை கைது செய்துள்ள அதிகாரிகள், தங்கத்தையும் கைப்பற்றி இருக்கின்றனர்.

Also Read | "இது என்னோட லாஸ்ட் சான்ஸ்-ன்னு கெஞ்சுனேன்.. அப்போ கூட".. EX பாய் ஃப்ரண்ட் பற்றி.. அனிகா விக்ரமன் Breaking..!

BENGALURU, AIRPORT, MAN, SMUGGLE GOLD, SLIPPERS, BENGALURU AIRPORT

மற்ற செய்திகள்