‘இது வெறும் ரயில் மட்டும் இல்ல’.. ஒரே போட்டோவுல எல்லோரையும் உருக வச்சிட்டியேப்பா.. இதயத்தை வென்ற இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமின்சார ரயிலை தொட்டு வணங்கிய இளைஞரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மும்பை புறநகர் ரயில்சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் மும்பையில் புறநகர் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிப்ரவரி 1ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்சேவை தொடங்கப்படும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
The soul of India... I pray we never lose it... https://t.co/Xw48usPnew
— anand mahindra (@anandmahindra) February 3, 2021
கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டதும், இளைஞர் ஒருவர் ரயிலை தொட்டு வணங்கி உள்ளே சென்றுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அன்றாட மக்களின் ஒரு அங்கமாக உள்ள மின்சார ரயில், தங்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என பலரும் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்