பூட்டிய ரயில் கழிவறைக்குள் சடலமாக கிடந்த நபர்.. 900 கிமீ கடந்த பிறகு தெரிய வந்த உண்மை!!.. குலை நடுங்கிப்போன பயணிகள்
முகப்பு > செய்திகள் > இந்தியாரெயில் கழிவறை ஒன்று நீண்ட நேரமாக உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த நிலையில், இதன் பின்னர் தெரிய வந்த விஷயம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள ரோஷா ரெயில் நிலையத்தில் ஜன்சேவா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ரெயில், பீகார் மாநிலம் பன்மங்கி சந்திப்பில் இருந்து சுமார் 900 கி. மீ வரை பயணம் செய்து ஷாஜஹான்பூர் வந்தடைந்துள்ளது. அப்படி இருக்கையில் அந்த ரெயிலில் இருந்த கழிவறை ஒன்று உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே வேளையில், அப்பகுதியில் இருந்த பயணிகள் பலரும் கழிவறையில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதாக கூறி புகார் ஒன்றையும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பயணிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரெயில்வே போலீசார், ரெயிலில் துர்நாற்றம் வந்த கழிவறையை உடைத்து கதவைத் திறந்துள்ளனர். அப்போது போலீசார் மற்றும் பயணிகள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அதற்குள் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
அந்த ரெயிலில் மொத்த பயண நேரமான 35 மணி நேரத்தில், அந்த ஆணின் உடலை காணும் வரை 24 மணி நேரம் வரை பயணம் செய்துள்ளது. அவர் உடல் அழுகி இருந்ததால் உள்ளே உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இறந்தவர் யார் என்பதை அறிய அங்குள்ள பயணிகளிடம் அடையாளத்தை சரி பார்க்கவும் செய்தனர். அந்த நபரிடம் ஆடை தவிர அடையாள அட்டை உள்ளிட்ட வேறு எந்த விவரங்களும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.
மேலும் உடல் கண்டுபிடிப்பதற்கு இரண்டு, மூன்று நாட்கள் முன்பு அவர் இறந்து போயிருப்பார் என்பதும் தெரிய வந்துள்ளது. அதே போல, கோமா நிலைக்கு சென்ற பிறகு அவர் இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சோதனையில் தெரிய வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
உயிரிழந்த நபர் குறித்த விவரங்கள் ரெயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவர் யார் என்பதை அடையாளம் காண போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
மற்ற செய்திகள்