"ஏங்க இந்த அவசரம்?".. அதிவேகத்தில் நெருங்கிய ரயில்.. அந்த நேரம் பார்த்து டிராக்கில் சிக்கிய பைக்.. IAS அதிகாரி பகிர்ந்த திக்..திக்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅதிவேகமாக சென்ற ரயிலில் சிக்கி இருசக்கர வாகனம் ஒன்று நொறுங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த வரலாறுகாணாத மழை.. வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள்.. உறைந்துபோன உலக நாடுகள்..!
பொதுவாக விபத்துகளுக்கு காரணமே மக்கள் காட்டும் அவசரம் தான். சில வினாடிகள் முந்திச் செல்வதற்காக சிலர் வாழ்க்கையையே பெரும் ஆபத்தில் தள்ளுகிறார்கள். குறிப்பாக ரயில்வே தண்டவாளங்களை கடக்க பொதுமக்கள் காட்டும் அவசரம், பல நேரங்களில் சோகத்தில் முடிந்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், ஒருவர் வேகமாக ரயில்வே தண்டவாளங்களை கடக்க முற்படுகிறார். அதற்குள் ரயில் வந்ததால் அவருடைய பைக் டிராக்கிலேயே சிக்கிக்கொள்கிறது. அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்திருக்கிறார். இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவனீஷ் சரண்
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் அவனீஷ், தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் சமூக மேம்பாடு, தன்னம்பிக்கை அளிக்கும் தகவல்களையும் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். இதன் காரணமாகவே இவரை ட்விட்டர் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள வீடியோ பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
அவசரம்
இந்த வீடியோவில் தண்டவாளங்களுக்கு அருகே மக்கள் சிலர் நிற்கின்றனர். அப்போது ஒரு தண்டவாளத்தில் ரயில் சென்றுகொண்டிருக்கிறது. மற்றொரு ரயில்வே தண்டவாளத்தில் இன்னொரு ரயில் தூரத்தில் வந்துகொண்டிருக்கிறது. இதனிடையே ரயில்வே டிராக்கை கடந்துசெல்ல இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் முயற்சி செய்கிறார். இதனிடையே, ரயில் அவரை நெருங்கிவிட்டது. இதனை அறிந்த அவர் உடனடியாக வாகனத்தை திருப்ப முயற்சிக்கையில், துரதிர்ஷ்டவசமாக பைக் தண்டவாளத்தில் சிக்கியது.
இருப்பினும், டிராக்கில் இருந்து பைக்கை வெளியேற்ற அவர் முயற்சி செய்தாலும் இந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அதற்குள் ரயில் நெருங்கிவிட்டதால் அங்கிருந்து அவர் தப்பியோடுகிறார். தண்டவாளத்தில் கிடந்த பைக் மீது அதிவேகத்தில் வந்த ரயில் மோதி, இழுத்துச் சென்றிருக்கிறது. இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
வாழ்க்கை உங்களுடையது
இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்த அவனீஷ் சரண்,"ஏன் இவ்வளவு அவசரம்? வாழ்க்கை உங்களுடையது. அதேபோல அந்த பைக்கும் உங்களுடையது தான்" எனக்குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
इतनी भी क्या जल्दी है. ज़िंदगी आपकी है, बाइक भी आपका ‘था’. pic.twitter.com/BxMPUbQGLM
— Awanish Sharan (@AwanishSharan) August 30, 2022
மற்ற செய்திகள்