ராத்திரி '12 மணிக்கு' பொண்டாட்டி கூட... 'ரோட்டு'ல நடந்து போனவர... மது பாட்டில், செங்கல் எல்லாம் கொண்டு அடிச்சுருக்காங்க... பதைபதைக்க வைக்கும் 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் இரவு 21 வயது இளைஞர் ஒருவர் இரவு மனைவியுடன் வெளியில் சுற்றியதை தொடர்ந்து அந்த இளைஞர் சிலரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த மிதுன் என்ற அந்த இளைஞர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வாடகை குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, மிதுன், அவரது மனைவி மற்றும் தந்தையுடன் இரவு சுமார் 12 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களை வழிமறித்த சிலர், இந்த நேரத்தில் இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கே செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த இளைஞர், இது எனது மனைவி தான் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அதில் ஒருவர், தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை கொண்டு மிதுனை தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மற்றொருவர் செங்கல் மற்றும் கற்களை கொண்டு இளைஞரை தாக்கியுள்ளார். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மிதுனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இளைஞர் உயிரிழந்தார்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இருவரை போலீசார் அடையாளம் கண்ட நிலையில், அவர்கள் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து, அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS