ரூ.100க்கு சண்டை: மெக்கானிக் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த நண்பன்.. நாடகத்தை பார்த்து மிரண்ட போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

100 ரூபாய் கடனைத் திருப்பி கேட்ட நபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருப்பது மும்பை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.100க்கு சண்டை: மெக்கானிக் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த நண்பன்.. நாடகத்தை பார்த்து மிரண்ட போலீஸ்..!

விஸ்வரூபமெடுக்கும் ஹிஜாப் விவகாரம்..3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

மும்பை தகிசர் கனபத் பாட்டீல் நகரை சேர்ந்தவர் ராஜூ பாட்டீல். இவருக்கு வயது 40. பாட்டீல் தகிசர் கிழக்குப் பகுதியில் மெக்கானிக் கரேஜ் ஒன்றினை நடத்திவந்தார். இவரிடம் தகிசரை சேர்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.100-ஐ கடனாக வாங்கியிருந்தார். அந்தப் பணத்தை அவர் திருப்பிக்கொடுக்கவில்லை.

பணம் எங்கே?

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், தன்னிடம் கடன் வாங்கியவரின் உறவினரான பரமேஸ்வரன் (28) என்பவரை ராஜூ பாட்டீல் பார்த்திருக்கிறார். அப்போது, கடன் விஷயத்தைச் சொல்லி பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சண்டையின்போது பரமேஸ்வரனை பாட்டீல் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பரமேஸ்வரன், ராஜூ பாட்டீலை வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

மாஸ்டர் பிளான்

கொலை குற்றத்திலிருந்து தப்பிக்க முடிவெடுத்த பரமேஸ்வரன், ராஜூ பாட்டிலின் உடலுக்கு தீ வைத்து கொளுத்தியிருக்கிறார். மக்களிடம் ராஜு பாட்டீல் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார். இதனிடையே ராஜு பேட்டீலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் வயரால் கழுத்து நெறிக்கப்பட்டதன் காரணமாகவே, ராஜு பாட்டீல் உயிரிழந்ததாக தெளிவுபடுத்தப்படவே காவல்துறை பரமேஸ்வரனை கைது செய்திருக்கிறது. கொலையும் செய்துவிட்டு, அதனை மறைக்க தற்கொலை நாடகம் ஒன்றினையும் நிகழ்த்தப் பார்த்த பரமேஸ்வரன் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

கைது

100 ரூபாய் கடன் விவகாரத்தில் கொலை செய்த பரமேஸ்வரனை மும்பை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். 100 ரூபாய் கடனுக்காக ஒருவர் கொலை செய்யப்பட்டது மும்பையையே உலுக்கியுள்ளது.

ஒருநாள் போட்டியில் முதல் இந்திய பேட்ஸ்மேன்.. ரோஹித் செய்ய இருக்கும் சம்பவம் என்னன்னு தெரியுமா?

MAN, ARREST, MECHANIC, DISPUTE, மெக்கானிக், நண்பன், போலீஸ், மும்பை

மற்ற செய்திகள்