"என்ன மண்ட ஒரு மார்க்கமா இருக்கு".. ஏர்போர்ட்ல சிக்கிய 3 பேர்.. தலையில இருந்து உருவப்பட்ட லட்சக்கணக்கான பணம்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாலட்சக்கணக்கான மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை தலையில் வைத்து மறைத்து பயணிக்க இருந்த 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்துவருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கொல்கத்தா மாநில விமான நிலையத்தில் டர்பனுக்குள் வைத்து ஏராளமான அமெரிக்க டாலர்களை கடத்திச் செல்ல இருந்த 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.
சந்தேகம்
மேற்கு வங்க மாநிலம், கொல்காத்தாவில் உள்ள விமான நிலையத்துக்கு நேற்று 3 பேர் சென்றுள்ளனர். தாய்லாந்து தலைநகரான பாங்காக்கிற்கு செல்ல திட்டமிட்டிருந்த இந்த மூன்று பேரும், விமாணத்திற்காக காத்திருந்தார்கள். அப்போது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இவர்கள் மூன்று பேரின் மீதும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அவர்களை பரிசோதனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.
அப்போது, அவர்களுடைய தலைப்பாகை (டர்பன்) வித்தியாசமாக இருப்பதைக்கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, அதிகாரிகள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் டர்பன் உள்ளே அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருப்பதை அந்நபர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
13,000 டாலர்
இதனை தொடர்ந்து அவற்றை வெளியே எடுக்குமாறு அதிகாரிகள் கூறவே, தலைப்பாகையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர்களை வெளியே எடுத்திருக்கிறார் அவர். மொத்தமாக 13,000 அமெரிக்க டாலர்கள் உள்ளே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அவருடன் வந்திருந்த 2 பேரை விசாரித்தபோது, அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
அவர்களது பைக்குள் 29,000 அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பைகளில் ரகசிய பகுதி அமைத்து அதற்குள் டாலர்களை வைத்து தைத்திருக்கிறார்கள் இவர்கள். மொத்தமாக அவர்களிடம் இருந்து 42,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு 32,84,400 ருபாய் எனவும் கொல்கத்தா விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
வைரல் வீடியோ
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கிஷன் நிகாம், கிருஷ்ணா மற்றும் ஜதீந்தர் சிங் என்பதும், அவர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு டாலர்களை கடத்திச் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்திருக்கிறது. இதனிடையே கொல்கத்தா விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒருவர் தனது தலைப்பாகையில் இருந்து டாலர்களை வெளியே எடுக்கும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Acting on spot intelligence in the intervening night of 19/20-7-22 3consecutive seizures of 42000 #USD (worth ₹33.61L) were affected by #AIUKolkata out of which a unique concealment of 13000USD was detected from turban (Pagri) worn by a pax @cbic_india @PIBKolkata @DDBanglaNews pic.twitter.com/i404mGW3qh
— Kolkata Customs (@kolkata_customs) July 21, 2022
Also Read | பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தல்.. கரெக்ட்-ஆன Time ல ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச மீம்.. வைரல் ட்வீட்..!
மற்ற செய்திகள்