The Legend
Maha Others

நைட்ல போன் பேசிய கணவனை இழந்த பெண்... சந்தேகப்பட்டு கொழுந்தன் செஞ்ச விபரீதம்.. அதிர்ச்சியில் உறைந்துபோன உறவினர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரேதச மாநிலத்தில் கணவனை இழந்த பெண்ணை சந்தேகப்பட்டு அவரது கொழுந்தனே அப்பெண்ணை கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

நைட்ல போன் பேசிய கணவனை இழந்த பெண்... சந்தேகப்பட்டு கொழுந்தன் செஞ்ச விபரீதம்.. அதிர்ச்சியில் உறைந்துபோன உறவினர்கள்..!

Also Read | "குரங்கு அம்மை நோய்க்கு இந்த மருந்தை Use பண்ணலாமா?".. ஐரோப்பிய யூனியன் சொன்னது என்ன?.. முழு விபரம்..!

உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் கவுரவ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நேர்ந்த விபத்தில் சிக்கிய கவுரவ் துரதிருஷ்ட வசமாக உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், அவரது மனைவி தனது குழந்தைகளுடன் தனது மாமனார் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

சந்தேகம்

இந்நிலையில், கணவனை இழந்த அந்த பெண் இரவு நேரத்தில் போன் பேசியதாக சந்தேகமடைந்திருக்கிறார் அவருடைய கொழுந்தன் அபிஷேக். இறந்துபோன கவுரவின் சகோதரரான அபிஷேக், இதுகுறித்து அவ்வப்போது பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்ற அபிஷேக் இரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் முதல் தளத்தில் இருந்த பெண்ணின் அறையை தட்டியிருக்கிறார் அபிஷேக். இரவு நேரம் என்பதால் அச்சத்துடன் கதவை திறந்த அந்த பெண், அபிஷேக்கை கண்டு திகைத்திருக்கிறார். அப்போது, அந்த பெண்ணை அபிஷேக் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் அங்கேயே மயங்கிவிழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

Man arrested by police after he hit his sister in law

கைது

இதனையடுத்து, பெண்ணின் உடலை மறைக்க முடிவெடுத்த அபிஷேக், உடலை வேறு இடத்தில் வீசியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காசியாபாத் நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அபிஷேக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசிய நிலையில், சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

இதனிடையே கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்படவே, அதனை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, அபிஷேக்கையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

சகோதரனின் மனைவி இரவு நேரத்தில் போன் பேசியதாக சந்தேகப்பட்டு, கொழுந்தனே அந்த பெண்ணை கொலை செய்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.

Also Read | ஏலத்துக்கு வந்த முகமது அலியின் சாம்பியன்ஷிப் பெல்ட்.. சூடுபிடிச்ச ஏலம்.. யம்மாடி இவ்வளவு கோடியா.. அப்படி என்ன இருக்கு அதுல.?

UTTARPRADESH, POLICE, MAN, ARREST, SISTER IN LAW

மற்ற செய்திகள்