பாட்டியை கொலை செய்து விட்டு.. 4 மாசமா வீட்டில் வைத்திருந்த இளைஞர்.. அம்மா வேற சப்போர்ட்.. 5 வருசம் கழிச்சு தெரிஞ்ச பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம், பெங்களூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சஞ்சய் வாசுதேவ் ராவ். இவர் தனது தாயார் சசிகலா மற்றும் பாட்டி சாந்தகுமாரி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

பாட்டியை கொலை செய்து விட்டு.. 4 மாசமா வீட்டில் வைத்திருந்த இளைஞர்.. அம்மா வேற சப்போர்ட்.. 5 வருசம் கழிச்சு தெரிஞ்ச பின்னணி!!

Also Read | தான் பிறந்த கருவிலேயே குழந்தை பெற்றெடுக்க முடிவெடுத்த பெண்?!.. சாத்தியமா? வியக்க வைக்கும் பின்னணி!

இதனிடையே, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென தாங்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு கிளம்பிச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் வீட்டின் உரிமையாளரை அழைத்த சஞ்சய், ஒரு அவசர காரியத்திற்காக சொந்த ஊர் வந்திருப்பதாகவும் ஒரு சில தினங்களில் வீடு திரும்பி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், நீண்ட நாட்கள் சென்ற பிறகும் சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர் திரும்பி வரவே இல்லை என கூறப்படுகிறது. அதே வேளையில், சஞ்சய் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகத்தில் இருந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.

தொடர்ந்து, சஞ்சய் தங்கி இருந்த வீட்டிற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட போலீசார், அங்கிருந்த அலமாரியின் கதவுகள் மீது சிமெண்ட் பூசப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர். இதனையடுத்து, அந்த சிமெண்டை உடைத்து அலமாரியை திறந்து பார்த்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அழுகிய நிலையில், மூதாட்டி உடல் இருக்க அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். தலையில் அடிபட்டு அந்த மூதாட்டி உயிரிழந்திருப்பது தெரிய வந்த நிலையில், சஞ்சய் மற்றும் சசிகலா ஆகியோரை போலீசார் தேடி வந்துள்ளனர்.

ஆனால், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது பற்றிய விவரத்தினை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், சுமார் 5 ஆண்டுகள் கழித்து கடந்த சில தினங்கள் முன்பாக, மகாராஷ்டிராவின் கோஹல்பூர் மாவட்டத்தில் அவர்கள் இருவரும் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், சஞ்சய் மற்றும் சசிகலாவை கைது செய்த போலீசார், மூதாட்டியின் உடல் கிடைத்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, தனது பாட்டியை கொலை செய்ததை சஞ்சய் ஒப்புக் கொண்டார். சஞ்சய்யின் பாட்டி சாந்தகுமாரி மிகவும் கண்டிப்புடன் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், ஹோட்டலில் இருந்து உணவு வாங்குவதையும் அவர் கண்டித்து வந்துள்ளார்.

இப்படிப்பட்ட பல பழக்கங்கள், சஞ்சய்க்கு கடும் எரிச்சலை உண்டு பண்ணி உள்ளது. அப்படி ஒரு நாள், ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி வந்துள்ளார் சஞ்சய். இதனை அறிந்ததும் அவரை கண்டிக்க தொடங்கி உள்ளார் சாந்தகுமாரி. மேலும், சஞ்சய் வாங்கி வந்த உணவை அவர் முகத்தில் சந்தகுமாரி வீசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், உச்சகட்ட கோபம் அடைந்த சஞ்சய், அங்கிருந்த இரும்பை எடுத்து பாட்டியை தாக்கி உள்ளார்.

இதில், அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்து போயுள்ளார். இதனால், பயந்து போன சஞ்சய் மற்றும் அவரது தாயார் சசிகலா ஆகியோர், சாந்தகுமாரி உடலை நான்கு மாதங்களாக அலமாரியில் சிமெண்ட் பூசி அடைத்து வைத்துள்ளனர். நான்கு மாதங்கள் கழித்து துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் அங்கிருந்து வீட்டை காலி செய்து சென்றுள்ளனர். இது பற்றிய விவரம், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Also Read | "இதுக்கு எல்லாம் 4 ரன் குடுப்பீங்களா?".. நடுவரிடம் விவாதத்தில் ஈடுபட்ட சிராஜ்.. பரபரப்பை கிளப்பிய சம்பவம்!!

KARNATAKA, BENGALURU, MAN, MOTHER, GRANDMOTHER

மற்ற செய்திகள்