'உங்கள கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அவர எனக்கு தெரியும்'... 'ட்விஸ்டை எதிர்பாக்காத கணவன்'... மனைவியின் பேஸ்புக் நண்பருக்கு நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கணவன் மனைவிக்குள் இருக்கும் புரிதல் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அதில் சிறு குழப்பம் ஏற்பட்டாலும் வாழ்க்கை என்பது நரகமாகி விடும். அந்த வகையில் கணவன் மனைவிக்குள் இருந்த புரிதல் தொலைந்ததால் நடந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

'உங்கள கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அவர எனக்கு தெரியும்'... 'ட்விஸ்டை எதிர்பாக்காத கணவன்'... மனைவியின் பேஸ்புக் நண்பருக்கு நடந்த விபரீதம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்தவர் வியன்காட் ஜாதவ். இவர் ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜாதவ்வை காணவில்லை என அவரது சகோதரர் காவல்நிலையத்தில்  புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் காணாமல் போன ஜாதவ் குறித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதையடுத்து அயாஜ் ஷேக் மற்றும் அவரது நண்பர் சோன்யா பரதே ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அயாஜ் ஷேக்கிற்கு திருமணமான நிலையில், அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வியன்காட் ஜாதவ்விடம் முகநூல் மூலமாக சேட் செய்து வந்துள்ளார். இருவரும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், தனது மனைவி வேறொரு நபருடன் பேசுவதை விரும்பாத அயாஜ் ஷேக் அதுகுறித்து மனைவியிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவர், உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நாங்கள் இருவரும் முகநூலில் நண்பர்கள். ஆனால் நாங்கள் இதுவரை சந்தித்தது இல்லை. இருவரும் நல்ல நண்பர்களே எனக் கூறியுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர், ஜாதவ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து ஜாதவ்வை தனியாகச் சந்தித்த அயாஜ் ஷேக், தனது நண்பருடன் சேர்ந்து ஜாதவ்வை கொலை செய்துள்ளார். கொலைக்கு உறுதுணையாக இருந்த சோன்யா பரதே ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர். கொலை செய்யப்பட்ட வியன்காட் ஜாதவ்வின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

மனைவியின் பேஸ்புக் நண்பரைக் கணவனே கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்