குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில், போலீசார் மீதும் தாக்குதல்கள் நடைப்பெற்றுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டம் ஆகியுள்ளது. இருந்தப்போதிலும் இந்தச் சட்டதிற்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைப்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மங்களூரு நகரில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது 2 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இதேபோல், குஜராத்தின் அகமதாபாத்தில் போராட்டத்தின் போது, காவலர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் காவல் துறையினரின் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்ட நிலையில்,காவலர்களில் இருவர் சிக்கிக் கொள்ள அவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.