'வாய்க்கு வக்கணையாக சாப்பாடு வேணும், ஆனா அவங்க மனுசங்க இல்லையா'... 'டெலிவரி செய்வோருக்கு வந்த கட்டுப்பாடு'... தீப்பிழம்பாய் கொதித்த நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உணவு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நெட்டிசன்களை கொதிப்படையச் செய்துள்ளது.

'வாய்க்கு வக்கணையாக சாப்பாடு வேணும், ஆனா அவங்க மனுசங்க இல்லையா'... 'டெலிவரி செய்வோருக்கு வந்த கட்டுப்பாடு'... தீப்பிழம்பாய் கொதித்த நெட்டிசன்கள்!

வீட்டில் இருந்தபடியே நமக்கு விருப்பப்பட்ட உணவை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்வோரின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் வணிகம் என்பது ஆயிரக்கணக்கான கோடிகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. விருப்பப்பட்ட உணவைக் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செய்வதில் உணவு விநியோகிக்கும் பணியாளர்களின் பணி என்பது மகத்தானது.

Mall's Decision To Ban Food Delivery Executives From Using Lifts

இவ்வாறு உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இளைஞர்கள் தான். அதைத்தாண்டி குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு வேலை செய்து கொண்டே  அந்த பணி நேரத்திற்குப் பின்னர் 40 வயதைக் கடந்த பலரும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு உணவு டெலிவரி செய்யும் சிலருக்கும், உணவை ஆர்டர் செய்பவர்களுக்கும் அவ்வப்போது ஏற்படும் உரசல்கள் பெரும் சர்ச்சையாக மாறுவது உண்டு.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்று, உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஸ்விகி மற்றும் ஸோமோட்டோ பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தக்கூடாது என்றும், படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கட்டுப்பாட்டினை விதித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mall's Decision To Ban Food Delivery Executives From Using Lifts

அதேநேரத்தில் மற்றொரு உணவகமோ, உணவு விநியோகிக்கும் பணியாளர்கள் தங்கள் இடத்தில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தத் தடை விதித்திருப்பதும் பலரையும் கொதிப்படையச் செய்துள்ளது. நமக்கு வாய்க்கு ருசியாக உணவு மட்டும் வேண்டும், ஆனால் அவர்களை மனிதர்களாகக் கூட மதிக்க மாட்டோம் எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் பலரும் கொதிப்படைந்துள்ளார்கள்.

Mall's Decision To Ban Food Delivery Executives From Using Lifts

உணவை டெலிவரி செய்வோர் எதிர்பார்ப்பது மரியாதையை மட்டுமே அதை ஒழுங்காகக் கொடுத்தால் போதும் எனப் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்