"இத பண்ணா போதும்.. கொரோனா டெஸ்ட் பண்ண எப்படி வராங்கனு மட்டும் பாருங்க!".. 'மலேசியா' அறிவித்த 'அற்புத' சலுகை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மலேசியாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை 7,819 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

"இத பண்ணா போதும்.. கொரோனா டெஸ்ட் பண்ண எப்படி வராங்கனு மட்டும் பாருங்க!".. 'மலேசியா' அறிவித்த 'அற்புத' சலுகை!

இந்த நிலையில் அந்நிய தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 150 மலேசிய ரிங்கிட் மானியமாக வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் அந்நிய தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனையை தானாக முன்வந்து செய்வார்கள் என்று அந்நாட்டு அரசு கணித்துள்ளது.

முன்னதாக மலேசியாவில் உள்ள அந்நிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள முதலாளிகள், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அந்நிய தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு பெரும் தொகை  செலவாகும் என்றும் அரசாங்கம் இதற்கான மானியத்தை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை அடுத்து ஒவ்வொரு தொழிலாளருக்கும் தலா 150 ரிங்கிட் மானியமாக வழங்கப்படும் என மத்திய மனிதவள அமைச்சர் சரவணன் அறிவித்துள்ளார். இதேபோல் மலேசியாவில் தங்கும் விடுதியில் சுமார்  30 ஆயிரம் பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுபோக கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறும் 10 ஆயிரம் பேர் வற்புறுத்தப்பட்டிருப்பது,  6 ஆயிரம் ஊழியர்களின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி குற்றம்சாட்டியுள்ளது.

மற்ற செய்திகள்