7 வருசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம்.. மரியா ஷரபோவாவிடம் ‘மன்னிப்பு’ கேட்ட கேரள சச்சின் ரசிகர்கள்.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாடென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்தில் கேரள சச்சின் ரசிகர்கள் மன்னிப்பு கேட்டு வரும் சம்பவம் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, கடந்த 2014ம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் ‘யார் அந்த சச்சின்?’ என ஒரு கேள்வி கேட்டிருந்தார். அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மரியா ஷரபோவா தமக்கு உண்மையிலேயே சச்சின் பற்றித் தெரியாது என விளக்கம் அளித்தும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடுமையாகக் கேலி செய்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர்.
குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் மரியாவின் பேஸ்புக் பக்கத்தில் ‘கிரிக்கெட் கடவுளான சச்சினைத் தெரியாதா?’ என மரியா ஷரபோவாவை கிண்டல் செய்தார்கள். இந்த நிலையில் தற்போது அவ்வாறு கேலி செய்தோர் பலரும் மரியாவிடம் மன்னிப்பு கோரி பேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர்.
Sachin fans from Kerala visit Maria Sharapova's facebook page to say sorry for abusing her 7 years ago.. 🙆🏾♂️ pic.twitter.com/tNCCQWnXMQ
— Mohammed Zubair (@zoo_bear) February 4, 2021
தற்போது #SorryMariaSharapova என்னும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்