‘ரூ.50 லட்சம் பரிசு’!.. கொரோனா பரவலை தடுக்க ‘புதிய’ முயற்சி.. மகாராஷ்டிரா மாநிலம் அசத்தல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகிராமங்களில் நிலவி வரும் கொரோனா பாதிப்பை குறைக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மகாராஷ்டிரா மாநிலம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 57 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 96,198 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்கு முழு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அம்மாநிலத்தின் கிராமப்புறங்களில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில், கிராமங்களுக்கான போட்டியை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. நோய் தொற்று பரவுவதைத் தடுக்க சில கிராமங்கள் மேற்கொண்ட முயற்சிகளை முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் பாராட்டி இருந்த நிலையில், தற்போது ‘கொரோனா இல்லாத கிராமம்’ என்ற போட்டியை அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அம்மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப், ‘இப்போட்டியின் கீழ் ஒவ்வொரு வருவாய் பிரிவிலும் கொரோனா இல்லாத 3 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசு ரூ.50 லட்சம், இரண்டாவது பரிசு ரூ.25 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசு ரூ.15 லட்சம் வழங்கப்படும். மாநிலத்தில் ஆறு வருவாய் பிரிவுகள் உள்ளன. அதன்படி, மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 5.4 கோடி மாநில அரசு சார்பில் வழங்கப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்