மெர்சிடிஸ் வாங்க பிளான் போட்ட குத்துச் சண்டை வீராங்கனை.. மஹிந்திரா நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனைகளில் ஒருவராக இருப்பவர் நிகாத் ஷரீன் (Nikhat Zareen). 

மெர்சிடிஸ் வாங்க பிளான் போட்ட குத்துச் சண்டை வீராங்கனை.. மஹிந்திரா நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | அன்பு தங்கைக்கு 8 கோடிக்கு சீர்... ஊரையே திரும்பி பாக்க வெச்ச விவசாயி அண்ணன்கள்

இவர் சமீபத்தில் டெல்லியில் வைத்து நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் பங்கெடுத்திருந்தார். இந்தியா சார்பில் கலந்து கொண்ட நிகாத் ஷரீன், இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டதுடன், 5 - 0 என்ற புள்ளி கணக்கில் வியட்நாம் நாட்டை சேர்ந்த நிகுயென் என்ற வீராங்கனையையும் தோற்கடித்து இந்தியாவிற்காக பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

இது நிகாத் ஷரீன் வென்ற 2 ஆவது உலக சாம்பியன்ஷிப் பட்டம் ஆகும். அத்துடன் இந்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதுடன் பரிசுத் தொகையும் நிகாத் ஷரீனுக்கு வழங்கப்பட்டது.

Mahindra gifts thar car to boxing champion nikhat zareen

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை கொண்டு மெர்சிடிஸ் கார் ஒன்றையும் வாங்க நிகாத் ஷரீன் திட்டம் போட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில் தான் மஹிந்திரா நிறுவனம், தார் வாகனம் ஒன்றை பரிசாக நிகாத் ஷரீனுக்கு வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக மெர்சிடிஸ் கார் வாங்கவிருந்த திட்டத்தை கைவிட்ட நிகாத் ஷரீன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகை கொண்டு தனது பெற்றோர்களை இஸ்லாமியரின் புனித பயணமான உம்ராவுக்கு அனுப்ப செலவிட உள்ளதாகவும் நிகாத் ஷரீன் தெரிவித்துள்ளார்.

Mahindra gifts thar car to boxing champion nikhat zareen

Images are subject to © copyright to their respective owners.

பொதுவாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், சமீப காலமாக தங்கள் துறையில் சாதிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தார் வாகனத்தை பரிசாக வழங்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தார் வாகனத்தை அவர்கள் பரிசாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | திருப்பதி கோவிலில்.. 18 கோடி ரூபாய்க்கு 10 பேருந்துகள் காணிக்கை.. "எல்லாம் இதுக்காகத் தானா?"

ANAND MAHINDRA, MAHINDRA, GIFT, CAR, BOXING CHAMPION NIKHAT ZAREEN

மற்ற செய்திகள்