'இந்த காலத்தில இப்படி ஒரு மனஷனா'?.. குழந்தையை காப்பாற்றிய கையோடு... இளைஞர் எடுத்த அதிரடி முடிவு!.. 'நம்ம ஆயுசுக்கும் அவருக்கு சல்யுட் அடிக்கலாம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், அவர் அடுத்ததாக செய்துள்ள ஒரு செயல் அனைவரையும் கலங்கடிக்கச் செய்துள்ளது.

'இந்த காலத்தில இப்படி ஒரு மனஷனா'?.. குழந்தையை காப்பாற்றிய கையோடு... இளைஞர் எடுத்த அதிரடி முடிவு!.. 'நம்ம ஆயுசுக்கும் அவருக்கு சல்யுட் அடிக்கலாம்'!

மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை அருகே உள்ள வாங்கனி இரயில் நிலையத்தில் பார்வை மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் தனது மகனுடன் நடந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென்று அவரது மகன் தடுமாறிக் கீழே விழுந்தார்.

அதனை பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் எதிரே வந்துகொண்டிருந்த வேகமான ரயிலையும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மிகவும் வேகமாக ஓடி வந்து அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.

அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பலரும் மயூரை பாராட்டி வந்தனர். மயூருக்கு ரயில்வே சார்பில் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

                

இந்த நிலையில், அவர் அந்த தொகையில் பாதியை அக்குழந்தையின் படிப்பிற்காக தருவதாக கூறியுள்ளார். அக்குடும்பம் வறுமையில் வாடுவதை தான் அறிந்ததால் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்