'இந்திய நாடே உங்கள பாராட்டும்...' 'பக்கத்துக்கு வீட்டு அன்பு தங்கச்சியின் மகள்களுக்கு...' 'இந்து முறைப்படி திருமண சடங்குகள் செய்த இஸ்லாமியர்...' - கண்கலங்க வைக்கும் நிகழ்வு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிராவில் தன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இந்து குடும்பத்தில் உள்ள இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த முஸ்லீம் இளைஞரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

'இந்திய நாடே உங்கள பாராட்டும்...' 'பக்கத்துக்கு வீட்டு அன்பு தங்கச்சியின் மகள்களுக்கு...' 'இந்து முறைப்படி திருமண சடங்குகள் செய்த இஸ்லாமியர்...' - கண்கலங்க வைக்கும் நிகழ்வு...!

மகாராஷ்டிரா மாநிலம் போதேகான் மாவட்டம் அஹமத் நகரில், தந்தையை இழந்த இரு பெண்களுடன் அவர்களது தாயாரும் வசித்து வந்துள்ளனர்.

கணவனை இழந்து வாழ்க்கையில் முன்னேற போராடி கொண்டிருந்த அந்த தாய்க்கு அவரின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் முஸ்லீம் இளைஞர் பதான் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். இந்நிலையில் அதற்கு நன்றிக்கடனாக பாபாபாய் பதானுக்கு சகோதரர் என்ற முறையில் பல வருடங்களாக ரக்ஷா பந்தன் தினத்தன்று ராக்கி கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவனை இழந்த பெண்மணி, தன் இரு மகள்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளார். வெறும் ராக்கி கட்டிக்கொள்வதோடு மட்டும் நிற்காமல், பாசம் மாறாத பதானும், ஒரு சகோதரர் மற்றும் மாமா என்ற வகையில் இரு சகோதரிகளுக்கும் தன் கடமைகளைச் செய்துள்ளார்.

மேலும் மாமா என்ற முறையில், இரு பெண்களும் வீட்டை விட்டு வெளியேறும் போது இந்து மத நடைமுறைகளின்படி அனைத்து சடங்குகளையும் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்