இப்படியெல்லாமா ஒரு கணவர் பண்ணுவார்...! 'கொரோனான்னு சொல்லிட்டு மனுஷன் எஸ்கேப்...' 'மொபைல் சிக்னல் வச்சு ஆள சேஸ் பண்ணினப்போ...' - மனைவிக்கு காத்திருந்த ஷாக்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலம் நேவி மும்பையில் வசிக்கும் 28 வயதான இளைஞர் ஒருவர் தன் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம், கொரோனா தனக்கு இருப்பதாக சொல்லிவிட்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

இப்படியெல்லாமா ஒரு கணவர் பண்ணுவார்...! 'கொரோனான்னு சொல்லிட்டு மனுஷன் எஸ்கேப்...' 'மொபைல் சிக்னல் வச்சு ஆள சேஸ் பண்ணினப்போ...' - மனைவிக்கு காத்திருந்த ஷாக்...!

தலோஜாவில் வசிக்கும் 28 வயதான நபர் கடந்த ஜூலை 24-ஆம் தேதி தன் மனைவியிடம், தனக்கு  கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதனால் கூடிய சீக்கிரம் தான் இறக்க போவதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், திடீரென்று குடும்பத்தில் யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு ஓடியுள்ளார்.

இந்நிலையில் அந்த நபரின் மனைவி, தன் கணவரை காணவில்லை எனவும், அவருக்கு கொரோனா உள்ளதாகவும் வாஷி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் கோவிட்-19 பராமரிப்பு மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் என எல்லா இடங்களிலும் அந்த நபரைத் தேடியுள்ளனர். ஆனால் அவரின் செல்போன் எண்ணும்  அணைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரின் செல்போன் சிக்னல் மூலம் அந்த இளைஞர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருப்பது தெரியவந்துள்ளது. இளைஞரை மீட்க சென்ற போலீசாருக்கு அப்போது தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஊரை விட்டு சென்ற அந்த இளைஞர், தன்னுடைய அடையாளத்தை மாற்றி கொண்டு தன் கள்ளக்காதலியோடு சந்தோசமாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இந்தூரில் இருந்து நேவி மும்பைக்கு கூட்டிக்கொண்டு வந்து, தற்போது அவரின் மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மற்ற செய்திகள்