VIDEO : "அட, இந்த 'ஐடியா' கூட நல்லா இருக்கே"... வாடிக்கையாளர்களுடன் 'social distancing'அ 'கரெக்ட்'டா மெயின்டைன் பண்ண சிறப்பான 'பிளானை' கையில் எடுத்த 'கடைக்காரர்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தொற்று காரணமாக, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டது.

VIDEO : "அட, இந்த 'ஐடியா' கூட நல்லா இருக்கே"... வாடிக்கையாளர்களுடன் 'social distancing'அ 'கரெக்ட்'டா மெயின்டைன் பண்ண சிறப்பான 'பிளானை' கையில் எடுத்த 'கடைக்காரர்'!!!

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொது மக்கள், கடைகளில் கூட்டமாக நிற்காமல் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி, கடைக்காரர் ஒருவர் புதுமையான முறையை கையாண்டு வருகிறார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மராத்தியில் பேசும் அந்த நபர், பிளாஸ்டிக் பாத்திரம் ஒன்றை, சைக்கிள் வீல் மற்றும் அதனுடன் கப்பியை இணைத்து மேஜை போன்று உருவாக்கியுள்ளார். அவர் அதிலுள்ள பெடலை மிதித்தும் அந்த பாத்திரம் சற்று தூரத்தில் நிற்கும் வாடிக்கையளரிடம் சென்றடையும். அப்போது வாடிக்கையாளர் காசினை அந்த பாத்திரத்தில் வைத்து தங்கள் பொருட்களை எடுத்துக் கொள்வர்.

வாடிக்கையளர்கள் தரும் பணத்தை கூட சானிடைசர் மூலம் சுத்தம் செய்து, வெயிலில் இரண்டு நாட்கள் வைத்து விட்டு கிருமிகள் அழிந்த பின்னர் தான் அதனை பயன்படுத்தி கொள்கிறார் அந்த கடைக்காரர். இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களில் அதிகம் பேர் இதனை பகிரத் தொடங்கிய நிலையில், நெட்டிசன்களிடையே அதிகம் வைரலானது.

கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள அரசு அதிகம் அறிவுறுத்தி வரும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க, புதுமையான முயற்சியை கண்டுபிடித்துள்ள கடைக்காரரின் ஐடியாவிற்கு பலர் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்