கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பாக்காம.. முடிய புடிச்சு இழுத்து அடிச்சுருக்காங்க.. வனத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடுமை
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா : கர்ப்பிணி பெண் வனத்துறை அதிகாரி மீது நடக்கும் தாக்குதல் தொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டத்தில் பல்சவாடே என்னும் கிராமம் அமைந்துள்ளது. இதனை ஒட்டி வனப்பகுதி ஒன்றும் உள்ளது. இங்குள்ள வனத்துறையில், பெண் அதிகாரி ஒருவர் ரேஞ்சராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த பெண் அதிகாரியை, பல்சவாடே கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர், தன்னுடைய மனைவியுடன் இணைந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதல்
கிராமத்தின் முன்னாள் தலைவரான அந்த நபர், தற்போது உள்ளூர் வன மேலாண்மை கமிட்டியிலும் உறுப்பினராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சம்மந்தப்பட்ட அந்த பெண் அதிகாரி, வனத்துறையின் கீழ் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை, தன்னுடைய அனுமதி இல்லாமல், அழைத்துச் சென்றதன் பெயரில், கோபமடைந்துள்ளார்.
கர்ப்பிணி என்று கூட பார்க்கவில்லை
பின்னர், இது பற்றி, வனத்துறை அதிகாரியை அழைத்து, அந்த கமிட்டி உறுப்பினர் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது மனைவியை அழைத்துக் கொண்டு, ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து, பெண் அதிகாரியை தாக்கியுள்ளனர். அவர் மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். அதனைக் கூட பொருட்படுத்தாமல், அவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர்.
புகார்
அங்கிருந்த தொழிலாளர்கள் யாரும் இதனை தடுக்க முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி, கர்ப்பிணி பெண் அதிகாரி ஒருவரை தாக்கும் சம்பவம், அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. மேலும், தன்னை தாக்கியதன் பெயரில், அந்த தம்பதி மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
கணவர் மீதும் தாக்குதல்
இதன் பிறகு, சம்மந்தப்பட்ட இருவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர். மேலும், தாக்குதலுக்கு ஆளான பெண் வனத்துறை அதிகாரியின் கணவரும், வனத்துறையில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரையும் அந்த தம்பதியினர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டரில் கொந்தளிப்பு
இது தொடர்பான வீடியோவை, வனத்துறையில் பணிபுரிந்து வரும் பிரவீன் அங்குசாமி என்பவர், ட்விட்டரில் பகிர்ந்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவுக்கு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இது போன்ற செய்லகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது' என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை புலி நடமாட்டம்? ‘கிராம மக்கள் யாரும் வெளிய வர வேண்டாம்’.. வனத்துறை அறிவுறுத்தல்..!
The accused has been arrested this morning and will face the law at its strictest. Such acts will not be tolerated. https://t.co/04shu6ahiz
— Aaditya Thackeray (@AUThackeray) January 20, 2022
மற்ற செய்திகள்