VIDEO: 'அந்த டேஸ்ட் நாக்குல ஒட்டிகிச்சு...' 'கல்லோட ருசிய வேற எதுவுமே அடிச்சிக்க முடியாது...' இது எல்லாத்துக்கும் காரணம் ஒரு 'பாட்டி' தான்...! - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவை சேர்ந்த முதியவர் ஒருவர் கற்கள் சாப்பிடுவதை தன் விருப்பமாக கொண்டு தினமும் 250 கிராம் சாப்பிட்டுவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், சத்ரா மாவட்டம் அடர்கி குர்ட் கிராமத்தில் வசித்து வருகிறார் 78 வயதான ராமதாஸ் போக்கே என்னும் முதியவர். ஆனால் இவர் உணவு பழக்கத்தில் மற்றவர்களை போல இல்லாமல் கடந்த 32 வருடங்களாக கற்களை தின்று வரும் செய்தி பெரும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய கற்கள் தின்னும் பழக்கத்தை குறித்து கேட்கும் போது, ராமதாஸ் போக்கேவிற்கு சிறுவயதில் ஏற்பட்ட வயிற்று வலிக்கு எந்த மருந்தும் கைக்கொடுக்காத நிலையில், அக்கிராமத்தில் இருந்த பாட்டி ஒருவர் கல்லை தின்னுமாறு கூறியுள்ளார்.
இவரும் கற்களை சாப்பிட்டவுடன் ராமதாஸ் போக்கேவின் வயிற்று வலி சரியாகியுள்ளது. அதிலிருந்து தினமும் 250 கிராம் கற்களை சாப்பிட தொடங்கி 32 வருடங்களாக தொடர்ந்து வருகிறார்..
ராமதாஸின் கற்கள் சாப்பிடும் இந்த வழக்கத்தை அவர்களின் குடும்பத்தார் கண்டித்தாலும், கல்லின் ருசி பழகி போனதால் மற்ற உணவுகளை விட கற்களையே விரும்பி உண்கிறார். இதனால் இவர் யாருக்கும் தெரியாமல் கற்களை சாப்பிட்டு வருவதாக கூறுகிறார். இவரின் இந்த பழக்கமானது மனநல அளவில் ஏதாவது பாதிப்பின் விளைவாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்