512 கிலோ வெங்காயத்தை விற்க 70 கிமீ பயணித்த விவசாயி.. கொடுத்த தொகையை பார்த்து கண்ணீர் விட்ட சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் விளைவித்த 512 கிலோ வெங்காயத்திற்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே ஏலத்தில் கிடைத்திருப்பதாக கவலையுடன் தெரிவித்திருக்கிறார் விவசாயி ஒருவர்.

512 கிலோ வெங்காயத்தை விற்க 70 கிமீ பயணித்த விவசாயி.. கொடுத்த தொகையை பார்த்து கண்ணீர் விட்ட சோகம்..!

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | "LKG, UKG -க்கு ரூ‌.50 ஆயிரம், 1 லட்சமா‌?".. புதுச்சேரி முதல்வர் சொல்லும் மாற்றுவழி..!

மக்களின் பசியை போக்கும் விவசாய தொழில் பல நேரங்களில் விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பதை பார்த்திருப்போம். கனமழை, கடும் பனி ஆகியவை காரணமாக விளைவித்த பொருட்கள் சேதமாகும். அவற்றில் எல்லாம் தப்பித்து விளைவித்த பொருட்களை ஏலத்துக்கு எடுத்துக்கொண்டு போனாலும் அங்கே அவற்றுக்கான சரியான ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இந்த சோகம் பல்லாண்டுகளாக விவசாயிகளுக்கு மத்தியில் இருந்து வருகிறது.

Maharashtra Farmer Got A Check Of Rs 2 For Selling 512 Kg Onions

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர துக்காராம் ஜவான் எனும் விவசாயி தனக்கு சொந்தமான இடத்தில் வெங்காயம் பயிரிட்டு இருக்கிறார். அறுவடை செய்து முடித்த பின்னர் அதனை எடுத்துக்கொண்டு எழுபது கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு சென்று இருக்கிறார் அவர். அங்கு ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு எடுத்துக் கொள்வதாக ஏலதாரர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதன்படி 512 கிலோவிற்கு 512 ரூபாய் தொகை கிடைத்துள்ளது.

Maharashtra Farmer Got A Check Of Rs 2 For Selling 512 Kg Onions

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் அதிலும் ஒரு சோகம் என்னவெனில் போக்குவரத்து செலவுகள் மற்றும் இறக்கும் கூலி ஆகியவற்றிற்காக 509.50 ரூபாய் கொடுக்கப்பட்ட தொகையில் கழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஜவானுக்கு 2.49 ரூபாய் மட்டுமே இந்த ஏலத்தில் கிடைத்திருக்கிறது. இது குறித்து பேசிய ஜவான்,"கொண்டு வந்த வெங்காயத்தை ஒரு கிலோ ரூபாய்க்கு எடுத்துக் கொண்டார்கள். அதில் கிடைத்த 512 ரூபாயிலும் 509.50 ரூபாய் போக்குவரத்து மற்றும் ஏற்று இறக்கு கூலிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த வருடம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டார்கள். விதை, உரம், களைக்கொல்லி ஆகியவற்றின் விலை கடந்த மூன்று நான்கு வருடங்களில் இரண்டு மடங்காகி இருக்கிறது. இந்த 500 கிலோ வெங்காயத்தை அறுவடை செய்ய நான் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து இருக்கிறேன்" என கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.

Maharashtra Farmer Got A Check Of Rs 2 For Selling 512 Kg Onions

Images are subject to © copyright to their respective owners.

இது குறித்து பேசியுள்ள வியாபாரியான நசீர் கலீபா," ஏலத்திற்கு வந்த வெங்காயம் மிகவும் குறைவான தரத்தில் இருந்தன. முன்னதாக ஜவான் கொண்டு வந்தவை நல்ல தரத்தில் இருந்ததால் அவை கிலோ ரூபாய் 18 வரைக்கும் ஏலத்தில் கேட்கப்பட்டது. பிறகு அவர் கொண்டு வந்த வெங்காயம் கிலோ 14 ரூபாய்க்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தரத்தில் குறைந்த வெங்காயங்களுக்கு சந்தையில் தேவை இருப்பதில்லை" என்றார். இந்நிலையில் ஜவானுக்கு வழங்கப்பட்ட செக்கின் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | கனவுக்கு தடைபோட்ட வீல் சேர்...! ஆனாலும் அசரலயே.. உலக நாடுகளை சுற்றும் இளம்பெண்.. நெகிழ்ச்சி பின்னணி..

MAHARASHTRA, MAHARASHTRA FARMER, ONIONS, SELLING

மற்ற செய்திகள்