"Internet வழியா தான் பழக ஆரம்பிச்சோம்".. ஐரோப்பிய பெண்ணை ராமேஸ்வரத்தில் கரம் பிடித்த மதுரை இளைஞர்.. சுவாரஸ்ய பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலுக்கு கண்ணில்லை என்ற ஒரு கூற்று உள்ளது. அதாவது, காதலுக்கு வயது, இனம், மொழி, மதம் என எந்த விஷயமும் ஒரு தடையாக இருக்காது.
மாறாக, இவை எதையும் பார்க்காமல், ஒருவருக்கு ஒருவர் இடையேயான அன்பை மட்டுமே பரிமாறிக் கொண்டு உன்னதமான உணர்வை தருவது தான் காதலின் வெளிபாடு.
அப்படிப்பட்ட காதல் தான், வயது, மொழி, நாடு என அனைத்தையும் தாண்டி இருவருக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது.
அந்த வகையில், மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஐரோப்பா நாடான செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கும், ஐரோப்ப நாடான செக் குடியரசை சேர்ந்த கானாபம்குலோவா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதல் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்களுக்கு இடையே இணைய தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்கள், கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சமயத்தில், ஒருவரை ஒருவர் விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, தங்களின் விருப்பத்தினை பெற்றோர்களிடமும் காளிதாஸ் மற்றும் கானாபம்குலோவா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களும் எதிர்ப்பினை தெரிவிக்காமல், பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, ராமேஸ்வரத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் ஒன்றில் வைத்து, இந்து முறைப்படி காளிதாஸ் - கானாபம்குலோவா ஆகியோரின் திருமணம் நடந்துள்ளது.
இதன் பின்னர், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கும் அவர்கள் சென்றுள்ளனர். அங்கே பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், செக் குடியரசு நாட்டிற்கு காளிதாஸ் மற்றும் கானாபம்குலோவா ஆகியோரும் சென்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
வெளிநாட்டு பெண்ணை மணந்த மதுரை இளைஞர் தொடர்பான செய்தி மற்றும் புகைப்படங்கள், தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், நெட்டிசன்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்