'லஞ்சம் வாங்குவதில் 'புது ஸ்கீம்'-ஐ அறிமுகப்படுத்திய இன்ஸ்பெக்டர்'!.. குற்றப் பத்திரிக்கைக்கு பேரம் பேசிய அவலம்!.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!.. அதிர்ந்து போன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மதுரையில், குற்றப் பத்திரிக்கையிலிருந்து பெயரை நீக்க லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

'லஞ்சம் வாங்குவதில் 'புது ஸ்கீம்'-ஐ அறிமுகப்படுத்திய இன்ஸ்பெக்டர்'!.. குற்றப் பத்திரிக்கைக்கு பேரம் பேசிய அவலம்!.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!.. அதிர்ந்து போன அதிகாரிகள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. 2017- ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட அடிதடி வழக்கு மீதான குற்றப் பத்திரிக்கையில் நல்லதம்பியின் மகன் மாரி மற்றும் மருமகன் கமல்பாண்டியின் பெயர்கள் இடம்பெற்றன.

இதையடுத்து, நல்லதம்பி தனது மகன் மற்றும் மருமகன் சம்பவத்தின்போது அந்த இடத்தில் இல்லை எனவும் சட்டப்படியாக அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று செக்கானூரணி காவல்நிலைய ஆய்வாளர் அனிதாவிடம் முறையிட்டுள்ளார். இருவரது பெயரையும் நீக்க ஆய்வாளர் அனிதா 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

தவணை முறையில் லஞ்சப் பணத்தைச் செலுத்துமாறு காவல் ஆய்வாளர் அனிதா கூறிய நிலையில், நல்லதம்பி லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ. 30,000 பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நல்லதம்பியிடம் வழங்கினர். அதை நல்லதம்பி காவல் ஆய்வாளர் அனிதாவிடம் லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாகக் காவல் ஆய்வாளர் அனிதாவைக் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

மதுரை மாவட்ட சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வடிவேல் முன்பாக அனிதா ஆஜர்படுத்தப்பட்டார். வரும் டிசம்பர் 11 ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்தியச் சிறையில் காவல் ஆய்வாளர் அனிதா அடைக்கப்பட்டார். ஆய்வாளர் அனிதா வேறு வழக்குகளில் லஞ்சம் பெற்றுள்ளாரா என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

 

மற்ற செய்திகள்