Kaateri Mobile Logo Top

"மாசம் 50 ஆயிரம் தான் சம்பளம், ஆனா.." அரசு ஊழியர் வீட்டை திறந்ததும்.. அரண்டு போன அதிகாரிகள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலத்தில், மருத்துவக் கல்வித்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் வீட்டில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், கடும் அதிர்ச்சி என்று அவர்களுக்கு காத்திருந்தது.

"மாசம் 50 ஆயிரம் தான் சம்பளம், ஆனா.." அரசு ஊழியர் வீட்டை திறந்ததும்.. அரண்டு போன அதிகாரிகள்

மத்திய பிரதேச மாநிலம் மருத்துவக் கல்வித்துறையில் சீனியர் கிளர்க்காக பணியாற்றி வருபவர் கேஷ்வானி.

இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேஷ்வானி இல்லத்தில் உடனடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து சுமார் 85 லட்சம் ரூபாய் பணம், ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, கேஷ்வானி வீட்டிலிருந்து பல கோடி மதிப்பிலான அசையா சொத்து வாங்கப்பட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. அதே போல, அசயா சொத்துக்கள் அனைத்தையும் தனது மனைவி பெயரில் கேஷ்வானி வாங்கி இருந்ததும் அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது. மேலும், கேசவனின் குடும்ப உறுப்பினர்கள் பலர் பெயரிலும் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையே, கேசவன் வீட்டில் ரைடுக்காக அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்த சமயத்தில், அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாகவும், இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மருத்துவக் கல்வித் துறையில், சீனியர் கிளெர்க்காக பணியாற்றி வரும் கேஷ்வானி, மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

அப்படி இருக்கும் நிலையில், அவரால் எப்படி இத்தனை லட்சக்கணக்கிலான பணத்தினை சேர்க்க முடிந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று பேரிடர் உருவான காலத்தின் போது, மருத்துவத் துறையில் இருந்த கேஷ்வானி, நிறைய பணத்தை சம்பாதித்து இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தவிர, மற்ற சில துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வீட்டிலும் போலீசார் மற்றும் அதிகாரிகள் ரைடு நடத்தி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரின் வீட்டில், இத்தனை லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர செய்துள்ளது.

CLERK, GOVT OFFICIALS, RAID, MONEY

மற்ற செய்திகள்