இளம்பெண்ணைக் கொன்று.. சமூக வலைத்தளத்தில் வீடியோ பகிர்ந்த வாலிபர்..!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனியார் விடுதி ஒன்றில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | திருமணமாகி 3 மாசத்தில் கணவருக்கு ஸ்லோ பாய்சனா.?. தமிழகத்தை உலுக்கிய மனைவியின் வாட்ஸ் அப் சாட்.!
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பகுதியில் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் அறை எடுத்து தங்கி உள்ளார்.
அதே விடுதியில் மறுநாள் அந்த வாலிபரை பார்ப்பதற்காக இளம்பெண் ஒருவர் அங்கே வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, அந்த வாலிபரும் இளம்பெண்ணும் அங்கே உணவு ஆர்டர் செய்து உண்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்து தனது அறையை பூட்டி விட்டு அந்த இளைஞர் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் வரை அந்த அறை பூட்டப்பட்டு இருந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், விடுதி ஊழியர்கள் அந்த பெண் வெளியே வரவில்லை என்பதை கவனித்து சந்தேகம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
விடுதி நிர்வாகம் அந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இளம்பெண் அங்கே உயிரிழந்து கிடந்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி மூலம் மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் கிடைத்துள்ளது.
இதனிடையே, அந்த விடுதியில் இருந்த இளைஞர், உயிரிழந்த பெண்ணின் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து பகிர்ந்த வீடியோவும் அதன் பின்னால் உள்ள காரணமும் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
அதன்படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் அபிஜித். இவருக்கும் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த சில்பா என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் சமூக வலைத்தளம் மூலம் கிடைத்த அறிமுகம், நாளடைவில் அபிஜித் மற்றும் சில்பா ஆகியோரிடையே காதலாக மாறி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் அவர்கள் நீண்ட நாட்களாகவும் பழகி வந்துள்ளனர். அப்படி ஒரு சூழலில் தான் அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் சில்பா நெருங்கி பழகி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அது மட்டுமில்லாமல், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னரிடம் இருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டு மீண்டும் ஜபல்பூர் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் சில்பாவை கொலை செய்யவும் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, ஜபல்பூர் வந்த அபிஜித் அங்குள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து சில்பாவை அங்கே வர செய்துள்ளார்.
அங்கே வைத்து அவரை கொலை செய்தது மட்டுமில்லாமல், வீடியோ ஒன்றையும் சில்பாவின் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பகிர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றது. தன்னை ஏமாற்றியதற்காக இப்படி செய்ததாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள அபிஜித், சில்பா உயிரிழந்து கிடக்கும் காட்சிகளையும் அதில் பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலான நிலையில், இளைஞர் அபிஜித்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இளம்பெண் கொலையாகி சில நாட்கள் கழிந்தும் தலைமறைவாக உள்ள அபிஜித் மற்றும் அவரது பிசினஸ் பார்ட்னரை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்