"வெயில் நேரம்'ல,.. இனிமே சைக்கிள்'ல டெலிவரி வேணாம் பா" உணவு டெலிவரி ஊழியருக்கு போலீசார் கொடுத்த இன்ப அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்போதைய வெயில் காலத்தில், வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை காணப்படுகிறது. பகல் நேரத்தில் வெளியே இறங்க கூட பொது மக்கள் பலரும் அஞ்சி வருகின்றனர்.
Also Read | "காத்துவாக்குல 3 காதல்.." 15 வருஷம் லிவிங் டு கெதர்.. 6 குழந்தைங்க முன்னாடி நடந்த திருமணம்..
அந்த அளவுக்கு சமீப காலமாக வெயில் மிகவும் பயங்கரமாக வாட்டி எடுத்து வருகிறது. ஆனால், என்ன தான் வெயிலாக இருந்தாலும், வேலைக்கு சென்று வர வேண்டும் என நினைப்பவர்கள், நிச்சயம் கொடும் வெயிலில் கூட, வெளியே சென்று தான் வர வேண்டி இருக்கிறது.
அந்த வரிசையில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பலரும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தங்களின் பிழைப்புக்கு வேண்டி, ஓயாது உழைத்து வருகின்றனர்.
சைக்கிளில் உணவு டெலிவரி
இதற்கு வேண்டி, தங்களின் இரு சக்கர வாகனங்களில் உணவினை நேரத்திற்கு டெலிவரி செய்து வருகின்றனர். அந்த வகையில், உணவு டெலிவரி செய்து வந்த இளைஞர் ஒருவருக்கு, போலீசார் கொடுத்துள்ள பரிசு, பலரையும் நெகிழ வைத்துள்ளது. 22 வயதான ஜெய் ஹல்டே என்ற இளைஞர், ஜொமாட்டோவில் உணவு டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
போலீசார் எடுத்த முடிவு
அப்படி ஒரு நாள் இரவு நேரத்தில், வேர்க்க விறுவிறுக்க, சைக்கிளில் ஜெய் ஹல்டே உணவு டெலிவரி செய்ய சென்றதை இந்தோர் விஜய் நகர் காவல் நிலையத்தில் உள்ள தெஹ்சீப் குவாசி என்ற காவல் அதிகாரி கவனித்துள்ளார். மிகவும் சோர்வாக காணப்பட்ட ஹல்டேவிடம் குவாசி பேச்சு கொடுத்த போது, பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் ஜெய் ஹல்டேவுக்கு இரு சக்கர வாகனம் வாங்க பணம் இல்லை என்பதால், சைக்கிளில் உணவு டெலிவரி செய்து சம்பாதித்து வருவது தெரிய வந்துள்ளது.
பாராட்டும் மக்கள்..
இதன் பின்னர், இளைஞரின் நெருக்கடியை சமாளிக்க வேண்டி, குவாசி மற்றும் சக காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து தங்களால் முடிந்தளவு பணத்தினை திரட்டினர். மேலும், இரு சக்கரத்திற்கான மீதி பணத்தை தானே செலுத்தி விடுவதாக ஜெய் ஹல்டே தெரிவித்திருக்கிறார். இதன் பெயரில், புதிய இரு சக்கர வாகனம் ஒன்றை காவல்துறையினர் வாங்கி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம், பலரது பாராட்டையும் இந்தோர் போலீசாருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
இது பற்றி பேசிய ஜெய் ஹல்டே, "முன்பு எல்லாம் என்னுடைய சைக்கிள் மூலம், ஒரு நாளைக்கு 6 முதல் 8 ஆர்டர்களை மட்டுமே டெலிவரி செய்ய முடியும். ஆனால், இப்போது 15 முதல் 20 ஆர்டர்கள் வரை, என்னுடைய இருசக்கர வாகனங்கள் மூலம் டெலிவரி செய்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்